தினமும் தூங்கும் முன்பு ஆலிவ் எண்ணெய்யை கண் இமை முடிகளில் தடவவும். இவ்வாறு செய்தால் கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.
இமை முடி நன்கு வளர எலுமிச்சம் பழத் தோலை நன்கு சீவி எடுத்துக் கொள்ளவும். அதனை ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யில் நன்கு ஊற விடவும். பின்பு எண்ணெய்யை கண் இமை முடிகளில் தொடர்ந்து தடவி வரவும்.இவ்வாறு செய்தால் கண் இமை முடிகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.
கண்களின் மேல் கிரீன் டீ பையை 10 நிமிடம் வைக்கவும். இது இமை முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் இமை முடி வளர்ச்சிக்கும் நல்லது. கண்களை மூடிக் கொண்டு கண் இமைகளின் மேல் மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதன் மூலம் கண்களில் இரத்த ஓட்டம் சீராகி இமை முடி நன்கு வளரும்.
இரவு தூங்கும் முன்பு கண் இமை முடியின் மீது நல்ல கற்றாழை ஜெல்லை தடவவும். கற்றாழையில் உள்ள தாது உப்புக்கள் மற்றம் விட்டமின் போன்றவை இமை முடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், கண் இமை முடி வலிமையாக இருக்க உதவுகிறது.
விட்டமின் சி விட்டமின் இ, மற்றும் விட்டமின் பி போன்ற உணவுகளை சாப்பிடுவது நல்லது. இவ்வாறான உணவுகளை சாப்பிட்டால் நமது கண்களுக்கு நல்ல ஆரோக்கியம் ஏற்பட்டு கண் இமை முடி நன்கு வளரும்.