Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பிள் மேக்கப் எப்படி போட்டுக்கொள்வது சில டிப்ஸ் !!

Webdunia
பனிக்காலத்தில் பெரும்பாலும் சருமம் வறண்டிருக்கும். அதற்குத் தகுந்தாற்போல் சிம்பிளாக மேக்கப் செய்து கொள்வது நல்லது. 
 

முதலில் கன்சீலரை லைட்டாக, ஒரே சீராக முகத்தில் பூசினால் மேக்கப் அதிக நேரத்திற்கு அப்படியே இருக்கும்கலையாது.
 
பின்னர் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பிரஷ்ஷினால் பவுடரை பூசவும். எந்த இடத்திலும் அதிகம் படாமல் முகம் முழுவதும் ஒரே மாதிரியாக அப்ளை பண்ணவும். பின்பு, ஐப்ரோ பென்சிலால் புருவங்களை அடர்த்தியாக டச்சப் பண்ணவும். புருவத்தில் முடி இல்லாத இடத்தில் டச்சப் பண்ண வேண்டாம்.
 
அடுத்து, கண்களுக்கு மேலே புருவங்களுக்குக் கீழே மூடும் பகுதியை ஐ-ஷேடோ பூசவும். இந்த ஐஷேடோவின் நிறம் நீங்கள் உடுத்தும் உடைக்குப் பொருத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
 
பிறகு, கண்களுக்கு மேலே, இமைகளுக்கு அருகில் ஐ லைனரால் கண் மை போல் மெல்லிய கோடு வரையவும். இதனால் கண்கள் எடுப்பாகத் தெரியும்.
 
அதற்கடுத்து, கண் இமைகளை மஸ்காரா மூலம் அழகுபடுத்தினால், பார்ப்பதற்கு இமைகள் அடர்த்தியாகத் தெரியும். இதனால் கண்கள் பளிச்சென்று இருக்கும்.
 
கன்னங்களை பளபளப்பாக மின்னவைக்க… ப்ளஸ்ஷை பிரஷ்ஷால் டச்சப் செய்யவும். அப்படி செய்வதால் முகத்திற்கு தகுந்தாற்போல் கன்னங்கள் எடுப்பாக இருக்கும்.
 
உதட்டில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக, லிப் லைனர் பென்சிலால் அவுட் லைன் வரைந்து கொண்டால் லிப்ஸ்டிக்கை அழகாக வரையலாம். இதனால் லிப்ஸ்டிக் வழியாது.

தொடர்புடைய செய்திகள்

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments