Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதத்தினை பராமரிக்க எளிதான எண்ணெய் மசாஜ் !!

பாதத்தினை பராமரிக்க எளிதான எண்ணெய் மசாஜ் !!
பாதத்தின் தசைகளில் ஏற்படும் வீக்கம் அல்லது கட்டி பாத அழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. இது வீக்கம், சிவந்து போதல், எரிச்சல் ஆகியவற்றோடு தொடர்புடைய தீவிர வலி, பாதத்தின் மீது ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக இது ஏற்படுகிறது. 

சில நேரங்களில், இது பொருந்தாத அளவு கொண்ட காலணி, உடல் பருமன், அடிப்பாதத்தில் முள், நீரிழிவு ஆகியவற்றின் காரணமாகவும் ஏற்படுகிறது.
 
சிறிதளவு எண்ணெய்யை எடுத்து பாதத்தின் வலி கொண்ட இடத்தில் மசாஜ் செய்யும் போது நிவாரணம் கிடைக்கிறது. சிறந்த பலன் பெற ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். 
 
இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை எடுத்து கொண்டு அதனை மிதமாக சூடுப்படுத்தி, வலி உள்ள இடத்தில் சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். இவ்வாறு மசாஜ் செய்யும் போது பாதிக்கபட்ட இடத்தை சுற்றியுள்ள இரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது மற்றும் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கிறது. வலி குறையும் வரை இதை தொடர்ந்து பல நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம்.
 
ஐஸ் பேக் பாதத்தில் பாத அழற்சியால் ஏற்பட்ட வீக்கத்தினை மற்றும் வலியை குறைக்க ஐஸ் பேக்கை பயன்படுத்துவது வீட்டிலேயே செய்ய கூடிய சிறந்த தீர்வாகும். சில ஐஸ் கட்டிகளை எடுத்து நசுக்கி ஒரு பையினுள் போட்டு ஒரு பருத்தி துண்டினை கொண்டு சுற்றி எடுத்து அதனை கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் சில நிமிடங்களுக்கு ஒற்றி எடுக்க வேண்டும். 
 
இவ்வாறு செய்யும் போது கட்டியும் வீககமும் குறையும். ஒரு முறை தயார் செய்யும் பையை ௧௫ நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். இத்தனை ஒரு நாளில் பல முறை செய்து பாதத்தில் ஏற்பட்டுள்ள வலியை தணிக்கலாம்.
 
வெதுவெதுப்பான நீர் மற்றும் உப்பு பாத அழற்சியை குணப்படுத்த வெதுவெதுப்பான நீரும், உப்பும் சிறந்த துணை புரிகிறது. உப்பு கரைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் பாதத்தினை 10-15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் பாதிக்கப்பட்ட இடத்தின் வலியை ஆச்சரியத்தக்க வகையில் குறைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமுக்கிரா கிழங்கின் அற்புத மருத்துவ பயன்கள் !!