Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதட்டை சிவப்பாக்குவதற்கு உதவும் சில இயற்கை அழகு குறிப்புகள் !!

உதட்டை சிவப்பாக்குவதற்கு உதவும் சில இயற்கை அழகு குறிப்புகள் !!
, திங்கள், 6 ஜூன் 2022 (10:29 IST)
உதட்டை சிவப்பாக்குவதற்கு உதட்டு சாயம் பூசுவது தற்காலிகமானது. நிரந்தரமாக உதட்டுச் சாயம் பூசாமல் நம்முடைய உதடு சிவப்பாக இருக்க வேண்டுமானால் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே செய்யலாம்.


குறிப்பு 1. எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் உடன் ஆலிவ் என்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கவும். இதை உதட்டின் மீது தடவி நன்றாக உலரும் வரை வைத்திருந்து பிறகு மீண்டும் இந்த கலவையை மேல் அடுக்கில் தடவவும்.

நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் உதட்டை கழுவ வேண்டும். எலுமிச்சை இயற்கை சுத்தப்படுத்தியாக இருப்பதால் இது கறைபடிந்த உதடுகளை வெண்மையாக்க செய்கிறது. ஆலிவ் எண்ணெய் உதட்டை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

குறிப்பு 2. தேவையான பொருள்கள்: சர்க்கரை தேவையான அளவு, ஒரு டீஸ்பூன் தேன், சிறிதளவு எலுமிச்சை சாறு. செய்முறை: ஒரு சின்ன பவுலில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு கிளறி அதனுடன் சீனியை போட்டு சற்று நேரம் கிளற வேண்டும்.

சர்க்கரை மணல் போல இருக்கும் பொழுது அதை உதட்டில் எடுத்து முழுவதும் பூச வேண்டும். பூசி பின்பு ஒரு இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருந்து கீழாக மசாஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பின் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என்று மாற்றி மாற்றி ஒரு இரண்டு நிமிடங்களுக்கு மட்டும் மசாஜ் செய்தால் போதும். அதன் பின்பு உதட்டை கழுவி விட வேண்டும். இதே போல ஒரு தொடர்ந்து ஒருவாரத்திற்கு செய்து வந்தால் நிச்சயமாக நல்ல மாற்றம் தெரியும்.

குறிப்பு 3. வைட்டமின் இ சருமத்துக்கு அற்புதமான தீர்வு அளிக்கும். இதை உதடுகள் சோர்வாக இருக்கும் போதெல்லாம் தடவி வந்தால் உதடுகளுக்கு நீரேற்றம் கிடைக்கும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் வசம்பு !!