Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்களை அள்ளித்தரும் பழங்கள் !!

Fruits
, சனி, 4 ஜூன் 2022 (17:24 IST)
புரோட்டீன் சத்துள்ள பழங்கள்: மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம் (நேந்திரம் பழம்), பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.


கால்சியம் சத்துள்ள பழங்கள்: எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கால்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.

இரும்பு சத்து நிறைந்துள்ள பழங்கள்: ரத்தத்தை உற்பத்தி செய்கின்ற 'அயர்ன்' என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன.

பொட்டாசியம் சத்துள்ள பழங்கள்: ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது.இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.

பாஸ்பரஸ் சத்துள்ள பழங்கள்: மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பாஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன. மூளைக்கு அதிகளவில் வேலைக்கொடுகின்றவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும்.

பாஸ்பரஸ் சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் ஆகும். தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க செய்யும் மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலர் அத்திப்பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பலன்களும் !!