Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முகத்தை பளிச்சிட வைக்க உதவும் சிலவகை பழங்கள் !!

Advertiesment
முக அழகு
பப்பாளி பழக்கூழை 10 முதல் 15 நிமிடங்கள் வரை முகத்தில் பூசி வைத்து, பிறகு இளஞ்சூடான வெந்நீரில் முகத்தை கழுவினால் போதும். தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை பளிச்சிட வைக்கும்.

வறண்ட சருமத்தை கொண்டவர்கள் பப்பாளித்தோலின் அடிப்பகுதியை பூசிவர, சருமம் நீரோட்டம் பெற்று பொலிவடையும். வெள்ளரிக்காய்களை நறுக்கிக்கண்களில் வைத்துக்கட்டினால் கண்கள் பிரகாசம் அடைவதோடு, கண் எரிச்சலும் மட்டுப்படும். 
 
கணினி முன்னால் அதிக நேரம் செலவிடுபவர்கள், கண்களின் மேல் வெள்ளரியை வைத்துக்கொள்வது சிறந்தது. அதே போல வெள்ளரிக்காயை அரைத்து பூசினால் தோலில் உள்ள இணைப்பு திசுக்கள் ஊட்டம் பெறுவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் எரிச்சலும் குறையும். கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் வளையத்தை வைப்பதோடு, விளக்கெண்ணெய்யும் தடவலாம்.
 
முகத்தில் கற்றாழை கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். இதே போல் கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களை தடுக்கிறது. முகச்சவரம் செய்து முடித்த பிறகு `தேங்காய் எண்ணெய் - கற்றாழை கலவையை தடவுவதால் சவரம் செய்யும்போது உண்டான சிறு சிராய்ப்புகள் விரைவாக குணமடையும். முகமும் பிரகாசமடையும். 
 
எண்ணெய்ப்பசை சருமத்தை கொண்டவர்களுக்கு கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்து சிறுவர்களின் இயற்கை ஒப்பனை பொருள் குளுகுளு கற்றாழைதான்.
 
முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும் தடுக்கவும் தக்காளி பேஷியல் உதவுகிறது. இதில் உள்ள சத்துகள் தோலுக்கு ஊட்டம் தருகிறது. வாரத்துக்கு 2 முறை தக்காளியை மசித்து தயிரோடு சேர்த்து தடவிவந்தால், முகப்பருக்கள் நீங்கி முகப்பொலிவு உண்டாகும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடல்புண்களை ஆற்றும் அற்புத மருத்துவகுணம் நிறைந்த சுண்டைக்காய் !!