தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம்.
பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள்.
பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இது செல்களுக்கு ஆக்சிஜனை கொடுக்கிறது. வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும்பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.
பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது, நமது நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. வைட்டமின் பி6 ல் ஹீமோகுளோபின் என்ற அமிலம் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்சிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கும் பணியையும் செய்கிறது.
இதய நோய் ஏற்படுவதில் இருந்து இந்த பருப்பு நம்மை பாதுகாக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது. மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.