Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும வறட்சியை தடுக்க உதவும் உருளைக்கிழங்கு !!

Webdunia
சிலருக்கு முகம் மற்றும் சருமம் பொழிவிழந்து காணப்படுவது வழக்கம். இதற்கு உருளைக்கிழங்கு பெரிதும் உதவி புரிகின்றது. இது சருமத்திற்கு சிறந்த முறையில் பொலிவினை தருகின்றது.

உருளைக்கிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது, அதே சமயம், உங்கள் சருமத்தின் பொலிவை தக்க வைக்கவும் உருளைக் கிழங்கு உதவுகிறது. 
 
உருளைக் கிழங்கு பயன்படுத்தி தயாரிக்கும் பேஸ் பேக் பருக்களால் உண்டான தழும்புகள், புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க உதவுகிறது. உருளைக்கிழங்கில் மினரல், வைட்டமின், அன்டி ஆக்சிடென்ட் ஆகியவை உள்ளன.
 
உருளைக்கிழங்கு தோலை ஃபேஸ் பேக்காக கூட போடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து முழுவதுமாக கிடைத்திடும். உருளைக்கிழங்கு தோலை அரைத்து, பேஸ்ட் போல செய்தும் முகத்தில் தடவலாம். உருளைக்கிழங்கு தோலை சரும பராமரிப்பிற்கு பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம்.
 
தேவையான பொருட்கள்: உருளைக் கிழங்கு சாறு 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன், வெள்ளரிக்காய் சாறு 2 ஸ்பூன், ஒரு சிட்டிகை மஞ்சள். செய்முறை: மஞ்சளுடன் எல்லா சாறுகளையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் முழுவதுமாக காயும் வரை காத்திருக்கவும். காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றுவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.
 
குறிப்பு: எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். நேரடியாக எலுமிச்சை சாற்றை முகத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தில் எரிச்சல் உண்டாகலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments