தலைமுடி என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. சிலருக்கு இயற்கையிலேயே ஆரோக்கியமான தலைமுடி இருக்கும். சிலருக்கு அப்படி இல்லாததால் பல அழகுப் பொருட்களை வைத்து முடியை பராமரிப்பார்கள்.
தலை முடியை முடிந்தவரை காய்ந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். பொதுவாக தினசரி 50-60 முடிகளை இழக்கின்ற நாம் பருவக்காலத்தில் நம்மை அறியாமலேயே 200 முடிகளுக்கு மேல் இழக்கிறோம். அதனால் முடியை காய்ந்த நிலையில் வைத்திருந்தால், அதிகமான முடி கொட்டுதல் மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து தலைமுடி மற்றும் தலை சருமத்தை பாதுகாக்கலாம்.
பொடுகு மற்றும் முடி கொட்டுதல் தவிர எண்ணெய் பதமான தலை சருமமும் ஒரு பிரச்சனையே. இதனை போக்க மிதமான ஷாம்புவை பயன்படுத்தி சீரான முறையில் தலைமுடியை அலச வேண்டும்.
முடியின் ஆரோக்கியத்துக்கு உதவியாக துணை புரிவது புரதச்சத்து. ஆகவே முடி ஆரோக்கியமாக இருக்க அதிக புரதச்சத்து அடங்கியுள்ள முட்டை, கேரட், தானியங்கள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், குறைவான கொழுப்புச் சத்து அடங்கியுள்ள பால் பொருள்களை சாப்பிட வேண்டும்.
காற்றில் கலந்துள்ள ஈரத்தன்மை முடியில் அதிகம் பட்டால், முடி வறண்ட நிலைக்கு உள்ளாகும். நாளடைவில் பார்க்கவும் கலையிழந்து போகும். அதனால் சீரான முறையில் தலைமுடியை பதப்படுத்தினால், இந்த வறண்ட நிலை மாறும்.
வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்க்கவும். அகண்ட பற்கள் உள்ள சீப்பினை பயன்படுத்த வேண்டும். ஈரத்துடன் இருக்கும் போது கூந்தலை கட்டக் கூடாது. ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் முன் முடியை உலர்த்தவும். சீப்பினை அடுத்தவர்களுக்கு பகிர கூடாது.