Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்...?

Advertiesment
எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்...?
எலும்புகள் பலவீனமாக இருந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். முதுமையில் உடல்நல குறைபாடுகள் ஏற்படுவதற்கு எலும்புகள் பலவீனமடைவதும் ஒரு காரணம்.

பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு புகைப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. புகையிலை பொருட்களும் எலும்பு அடர்த்தியின் அளவை குறைக்கும் தன்மை கொண்டவை. எலும்புகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை சிதைக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை உருவாக்கவும் புகைப்பழக்கம் காரணமாக இருக்கிறது. 
 
எலும்புகள் பலவீனமடைவதற்கு மது அருந்துவதும் காரணமாக இருக்கிறது. அதிகமாக ஆல்ஹகால் உட்கொள்வது உடலில் கால்சியம் உறிஞ்சப்படும் அளவை குறைத்துவிடும். தொடர்ந்து மது அருந்துவது எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவையும் குறைத்துவிடும்.
 
அதிக உப்பு உட்கொள்வது எலும்புகளின் அடர்த்தியை குறைக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. உப்பில் உள்ள சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது அது சிறுநீர் மூலம் அதிக கால்சியத்தை வெளியேற்ற தொடங்கும். இந்த செயல்பாடு எலும்புகளை பலவீனப்படுத்தும். 
 
வைட்டமின் டி, கால்சியம் கொண்ட ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வதோடு மேற்கண்ட பழக்கவழக்கங்களை தவிர்ப்பது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
 
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஓடுதல், நீச்சல், நடனம் போன்ற உடல் செயல்பாடுகளும் எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்தவொரு உடல் இயக்க செயல்பாடும் இல்லாமல் தசைகள், எலும்புகளின் நலனை பேண முடியாது. எலும்புகள் பலவீனமடையும் அபாயத்தை தவிர்க்க சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். உடற்பயிற்சி மட்டுமின்றி யோகா போன்றவையும் எலும்புகளின் வலிமையை மேம்படுத்தும்.
 
சூரிய உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருக்க வேண்டும். இது, நமது உடலில் இருக்கும் வைட்டமின் டி சத்தை தூண்ட உதவும். இது, எலும்பின் வலிமைக்கு நல்லது.
 
தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும். இதில் இருக்கும் சல்ஃபர் தான் இதற்கு காரணம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருமலை குணப்படுத்த சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் !!