Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொடுகு தொல்லையை போக்கி முடி உதிர்வை தடுப்பது எப்படி...?

Dandruf - Hair Loss
, செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (15:35 IST)
உடலில் தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும். நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் வைட்டமின், மினரல் உள்ளதா என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி (B), வைட்டமின் இ (E) மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை அடிக்கடி எடுத்துகொள்ள வேண்டும்.


தலை முடியில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதின் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும். தினமும் தலைக்கு குளித்து தலையில் அழுக்கு தூசு போன்றவை சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள். தலையில் இருக்கும் பொடுகை அகற்றுவதின் மூலம் முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம். பொடுகை நீக்கும் மருந்தை பயன்படுத்தி தலையை பொடுகு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

தூக்கம் மனித உடலுக்கு மிகவும் அவசியமாகும். தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்வு ஏற்படும். நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம்.

கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் தலைமுடி கொட்டுவதை தடுப்பதோடு அடர்த்தியான முடியையும் பெற முடியும். கறிவேப்பிலையில் நிறைந்துள்ள இரும்புசத்து தலைமுடிக்கு அதிக அளவு போஷக்கினை கொடுத்து  முடி உதிர்வை தடுக்கிறது.

வாரம் ஒருமுறை குளிப்பதற்கு முன் தயிரை ஒரு அரைமணி நேரம் தலையில் ஊற வைத்து குளிப்பதால் கேசத்துக்கு ஊட்டசத்து கிடைத்து முடி கொட்டுவது குறையும். தேங்காய்ப்பால் கொண்டு தலைமுடியை அலசுவதின் மூலம்  முடி கொட்டுவதில் இருந்து விடுபடலாம்.

வெதுவெதுப்பான எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைவரும் விரும்பும் ருசியான கோவில் புளியோதரை எப்படி செய்வது...?