Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முடி உதிர்தல் பிரச்சனையை போக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புக்கள் !!

Advertiesment
Hair Loss
, சனி, 24 செப்டம்பர் 2022 (10:58 IST)
உணவு முறை மற்றும் சிலபல காரணங்களால், முடி கொட்டுதல் மற்றும் முடி வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது. முடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.


ஊட்டச்சத்து குறைபாடு, அதிகப்படியான மன அழுத்தம், பயன்படுத்தக்கூடிய முடி பராமரிப்பு தயாரிப்புகள், மரபணு காரணங்கள், உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு அதிகப்படியாக முடி உதிர்வு ஏற்படும்.

முடி வளர்ச்சிக்கு பல வகையான பொருட்கள் உள்ளது. கூந்தலில் தயிரை தடவுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வாரத்திற்கு மூன்று நாட்கள் தயிரை தலையில் தடவி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும். கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து முடியை வலுவாக்கும்.

தினமும் தலையில் தயிர் தடவி வந்தால் முடியின் வேர்க்கால்கள் வலுவடையும். மேலும் பொடுகு பிரச்சனை நீங்கும். தயிரில் புரோட்டின் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. கூந்தலுக்கு தயிரை பயன்படுத்துவதால் தலைமுடி மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

சிலருக்கு சிறு வயதிலேயே வெள்ளை முடி ஏற்படும். அவ்வாறு உள்ளவர்கள் கூந்தலுக்கு தயிரை பயன்படுத்த வேண்டும். இது கூந்தலுக்கு ஊட்டமளித்து மீண்டும் கருப்பாக்க உதவுகிறது.

முதலில் தலைமுடியை சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் தயிர் எடுத்து முடியின் வேர்களில் தயிர் தடவவும். கூந்தலில் தயிர் காய்ந்ததும், தலைமுடியை சாதாரண நீரில் கழுவவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் பலவீனம் போக்கி நிவாரணம் தரும் சீந்தில் செடி !!