Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐஸ் தடவுவதால் சரும துவாரங்களை சரிசெய்ய உதவுமா...?

ஐஸ் தடவுவதால் சரும துவாரங்களை சரிசெய்ய உதவுமா...?
மேக்-அப் போடுவதற்கு முன் முதலில் ஐஸ் கட்டியை கொண்டு முகத்தில் தடவவும். ஐஸ் கட்டி என்பது உங்கள் சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.  குளிர்ச்சி உங்கள் இரத்த குழாய்களை சுருங்க செய்யும்.

ஐஸ் தடவுவதால் கண்களுக்கு கீழ் ஏற்படும் வீக்கம் குறையும். ஐஸ் தடவுவதால் பருக்களினால் சருமம் சிவப்படைதல் குறையும். எரிச்சல் ஏற்படுத்தும் சருமத்திற்கும் இதமளிக்கும். பரு வர தொடங்கினாலே அதன் மீது ஐஸ் கட்டி வைத்து தடவினால் அழற்சி குறையும்.
 
நுண்ணுயிர் எதிர்ப்பி முகவர்களாகவும் மேற்பூச்சு ஆன்டி-பயாடிக்ஸ் ஆகவும் துவாரங்களுக்குள் நுழைந்திட ஐஸ் கட்டிகள் உதவும். இந்த மேற்பூச்சு சிகிச்சைகளால்  அது மிக ஆழமாக சருமத்திற்குள் நிழையும். அதற்கு காரணம் ஆழமாக ஊடுரவ உங்கள் சரும மேற்பரப்பை அது ஊடுருவத்தக்க வகையில் அமைக்கும்.
 
ஒரு ஐஸ் கட்டியை உங்கள் முகத்தின் மீது தடவினால் அது சருமத்தை மென்மையாக்கி, வெப்பத்தாலான கருமையை குறைக்கும். சூரிய வெப்பத்தில் இருந்து  தற்காலிக நிவாரணம் வேண்டுமானால், ஐஸ் கட்டிகளை முகம் முழுவதும் தடவுங்கள்.
 
பருக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐஸ் கட்டிகளை மெதுவாக தடவினால் சருமம் குளிர்ச்சி அடையும். பாதிக்கப்பட்ட இடங்களில் ஐஸ் கட்டிகளை 2-3 நிமிடங்கள் வரை தடவவும். அல்லது சருமம் ஈரமடைந்து, குளிர்ச்சியைப் பெறும் வரைக்கும் தடவவும். ஐஸ் கட்டியை நீண்ட நேரம் சருமத்தில் வைக்கவேண்டும்.
 
ஐஸ் ஃபேஷியலை தொடங்குவதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். பின் துடைப்பதற்கு மென்மையான துணியை எடுத்து, அதில் 1-2 ஐஸ் கட்டிகளை போட்டு மூடிக்கொள்ளுங்கள். ஐஸ் கட்டி உருகி, துணி ஈரமாகும் வரை இதனை முகத்தில் தடவுங்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொத்தவரங்காய் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...?