Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறத்தை குறைக்கும் குங்குமப்பூ !!

முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறத்தை குறைக்கும் குங்குமப்பூ !!
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும்.


நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணெய் கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.
 
உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை  தரக்கூடியது. இதில் வைட்டமின் சி மற்றும் மங்கனீசு எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும்.
 
குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊறவிடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம்  தெரியாமல் ஓடி விடும். 
 
சிறிது சந்தனம், சிறிதளவு குங்குமப்பூ மற்றும் இரண்டு ஸ்பூன் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக முகத்தை கழுவிய பின் இவை மூன்றையும் கலக்கி  முகத்தில் நன்கு பூசுங்கள். நன்கு மசாஜ் செய்து 20 நிமிடம் வரை காய விடுங்கள். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவுடன்  காட்சியளிக்கும்.
 
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண்கூடாகக் காணலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்ல ஜீரண சக்தியை உடலுக்கு அளித்திடும் தயிர் !!