Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கான காரணங்கள்...!

Advertiesment
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கான காரணங்கள்...!
பெண்களை பெரிதும் பாடாய்படுத்தும் பிரச்சனைகளில் ஒன்று பீரியட்(மாதவிடாய்). நாட்கள் தள்ளி போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி, ஒழுங்கின்மையான  பீரியட் போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள்.
மாதவிடாய் தாமதமானால், முதலில் நினைவுக்கு வருவது கர்ப்பம். ஆனால் தாமதமாக மாதவிடாய் வருவதற்கு கர்ப்பம் என்ற ஒரே ஒரு காரணம் மட்டும் தானா இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம் வாழ்க்கையில் பல விஷயங்களை பாதிக்கிறது. அதில் மாதவிடாய் சுழற்சியும் ஒன்று.  சில வேளைகளில் அதிக மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக கருப்பையில்  இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது.
 
மாதம் ஒரு கருமுட்டை பெண்ணின் முட்டைப் பையில் இருந்து வெளிப்படும். இந்தக் கரு குழந்தையாக உருவாகி விட்டால் பீரியட்ஸ் வராது. முட்டை  உயிராக மாறாமல், வெளிப்படுவது தான் உதிரப்போக்கு. இந்த சுழற்சிக்கு ஈஸ்ட்ரோ ஜென் மற்றும் புரோஜஸ்ட்ரான் ஆகிய 2 ஹார்மோன்கள் தான் காரணம்.  வழக்கமாக 28 நாட்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஏற்பட்டு மூன்று முதல் 5 நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்கும். 
 
இந்தக் காலகட்டத்தில் பீரியட்ஸ் துவங்குவதற்கு முன்பு பெண்ணின் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். ஒருவிதமான டென்ஷன், கோபம் வருதல், மார்பகங்  கள் கொஞ்சம் வீங்கி வலி போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் பீரியட்ஸ் லேட் ஆகி தாமதமான உதிரப்போக்கு, வழக்கத்தை விட குறைவாகப் போதல்,   அதிக உதிரப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதில் அதிக உதிரப்போக்கு முக்கியமான ஒன்று. கருப்பையில் ஏதாவது பைபர் கட்டிகள்  அல்லது வேறு கட்டிகள் இருக்கும் பட்சத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.
webdunia
ஹார்மோன் அளவு மாறுபாடு, கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன் ஆவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். இதெல்லாம் சரியாக இருந்தும்  கூட சிலருக்கு அதிக உதிரப் போக்கு மற்றும் கட்டியாக உதிரம் போதல் போன்ற தொல்லைகள் இருக்கும். அவர்கள் ஸ்கேன் மற்றும் கருப்பைக்கான  பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தை கண்டறிய வேண்டியதும் அவசியம். உடனடியாக கர்ப்பவியல் நிபுணர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.  கருப்பைக் கட்டிகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அவை கேன்சர் கட்டிகளாக மாறும் அபாயம் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாயு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரும் பிரண்டை...!