Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடது பக்கம் உறங்குவது கூடாது என கூற காரணம் என்ன?

Advertiesment
இடது பக்கம் உறங்குவது கூடாது என கூற காரணம் என்ன?
நாம் குப்புறப் படுக்கும்போது வயிற்றைக் கீழே வைத்து படுத்திருப்பாதால் சுவாச அமைப்பில் சிறிய அளவில் கோளாறு ஏற்படும். காரணம், முதுகெலும்புடைய கனம் கீழே அழுத்தும். மனிதன் மூச்சு விடும்போது நெஞ்சு மேலிருந்து கீழ் செல்லும். மனித  உடல் உறுப்பு செயல்பாட்டுக்கு பாதகமாக குப்புறப்படுத்துறங்தகுதல் அமையும்.

 
மல்லாந்து படுத்தால், மூச்சு வாய் வழியாகச் செல்லும். காரணம் நமது கீழ்த்தாடை மிக நெகிழ்வாக இருக்கின்றது. சுவாசித்தல் மூக்கு வழியாக நடப்பதுதான் சுகாதாரமானது. மூக்கு வழியாக சுவாசிக்கும்போது நாசியிலிருக்கும் ரோமங்கள், வாகு, இரத்தத்  தந்துகிகள் சேர்ந்து மனித சுவாசக் காற்றை சூடுபடுத்தி வடிகட்டி, சுத்தப்படுத்தி உடலுக்குள் அனுப்புகின்றன. மாறாக வாய்  வழியாக சுவாசிப்பதால் அசுத்தங்கள் அப்படியே உடலுக்குள் செல்கின்றன. மேலும், வாயிலுள்ள பசைத்தன்மை, "Pyorrhea" என்ற பாக்டீரியாவை உடலுக்குள் கொண்டு செல்கின்றது.
 
இடது புறமாகப் படுப்பதும் சிறந்த முறையல்ல. மனிதருக்கு இரண்டு நுரையீரல்கள். வலதுபுற நுரையீரல் கனமுடையது. இடதுபுற நுரையீரல் கனமற்றது. இடதுபுறமாக உறங்கினால் கனமான வலதுபுற நுரையீரல் இதயம் மேல் நகர்ந்து கனத்தால்  அழுத்தி அதன் செயல்பாடுகளைக் குறைக்கும். இதன் காரணமாகவே பலர் இதயத்துடிப்பு நின்று மரணிக்கின்றனர்.
 
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது. வலது புறமாகப் படுப்பதன் மூலம் இந்த நரம்புடைய செயல்பாடு நன்றாக இருக்கிறதென்று சமீபத்திய மருத்துவ ஆராய்ய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
 
கனம் முறைவாக இடது புற நுரையீரல் இருப்பதால், வலது புறமாக உறங்கும்போது அது கீழ் நகரும்போது, இதயம் சற்றே மேலிருப்பதால் இதயத்துடிப்புகள் சரியாக இயங்குகின்றன், பாதிப்படைவதில்லை. மேலும், உணவருந்திவிட்டு இடப்புறமாகப் படுப்போருக்கு உணவு குடலுக்குள் பயணித்து செரிமானம் அடைய 5 லிருந்து 8 மணி நேரம் ஆகும். அதே சமயம்  வலதுபுறமாகப் படுப்போருக்கு செரிமானம் அடைய இரண்டரை மணி நேரத்திலிருந்து நாலரை மணி நேரமே ஆகின்றதென்று  கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி லேகியம் செய்வது எப்படி?