ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் வரும் போதெல்லாம் டெங்கு காய்ச்சல் வந்து மக்களை அலறவிட்டு வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் வந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தற்போது பார்ப்போம்.
கடுமையான காய்ச்சல், வயிறு வலி, தாங்க முடியாத தலைவலி, மூட்டு வலி, கண் வலி, வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவின் அறிகுறிகள். அனைத்து எலும்புகளிலும் பயங்கர வலி எடுத்தால் உடனடியாக மருத்துவரை அணுகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏழாவது நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சுவாசிக்க சிரமப்படும் நிலையும் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பு குறைந்தும் காணப்படும்.
கொசுக்களால் பரவும் இந்த டெங்கு காய்ச்சல் காரணமாக பல்வலி, நுரையீரல், சிறுநீர் பாதை, எலும்பு மூட்டு ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக கைக்குழந்தைகள் கர்ப்பிணிகள் டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக தடுப்பூசி இல்லை என்பதால் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.