Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவு, உறக்கம் இன்றி 4 நாட்கள் தொடர்ந்து வீடியோ கேம் ஆடிய மாணவர் என்ன ஆனார் தெரியுமா?

உணவு, உறக்கம் இன்றி 4 நாட்கள் தொடர்ந்து வீடியோ கேம் ஆடிய மாணவர் என்ன ஆனார் தெரியுமா?
, செவ்வாய், 10 அக்டோபர் 2023 (21:15 IST)
வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையான பதின்பருவ மாணவர் ஒருவர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அந்த மாணவர், நான்கு நாட்கள் தொடர்ந்து விளையாடியதால், அந்த விளையாட்டில் உள்ள சக்தி பொருந்திய ஒரு நபராக தன்னை நினைத்து செயல்பட்ட போது, அவரது நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து, அவரது தாயார் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்.
 
மேல் சிகிச்சைக்காக, அம்புலன்ஸஸில் சென்னை கொண்டுவரப்பட்ட நேரத்தில் அந்த மாணவர், அதிக சத்தத்துடன் கத்துவது, பொருட்களை தூக்கி வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், அவரது கை, கால்களை துணியால் கட்டப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. அந்த மாணவரை மீட்கும் சிகிச்சையில் ஒரு பகுதியாக தூங்குவதற்கான மருந்துகள் தரப்பட்டதாக மருத்துவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
 
இந்த மாணவனின் பற்றிய செய்தி, பல பெற்றோர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வீடியோ கேம் விளையாடினால் மோசமான மனநிலை ஏற்படுமா, எப்போது ஒருவர் தன்னிலை மறந்து விளையாடுகிறார் என்று தெரிந்துகொள்வது, கேமுக்கு அடிமையானவர்களை எப்படி மீட்பது என்ற கேள்விகள் பலருக்கும் எழுகின்றன.
 
ஒரே நாளில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை, தொடர்ச்சியாக விளையாடுவதால் தான் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
 
பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர்கள், ஒரே நாளில் அந்த மாணவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தொடர்ச்சியாக விளையாடிய காரணத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். மாணவருக்கு ஏற்பட்டுள்ள மனநிலை குறித்து பேசிய மருத்துவர்கள் தங்களது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று தெரிவித்தனர்.
 
''இந்த மாணவர் வீட்டில் மிகவும் தனித்து இருந்துள்ளார். குழந்தைப் பருவம் முதல் அதிக தனிமையில் இருந்திருக்கிறார் மற்றும் சரியான அரவணைப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அவரது தந்தையின் இழப்பு, குடும்பத்தின் வறுமை காரணமாக, மற்றவர்கள் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தில், சிறு வயது முதல் இந்த மாணவருக்கு வீடியோ கேம் மட்டுமே தனக்கான ஒரு துணையாக தெரிந்திருக்கிறது. அதன் உச்சமாக, கடந்த வாரத்தில் நான்கு நாட்கள் உணவு, உறக்கம் இன்றி தொடர்ச்சியாக விளையாடியதால், அவருக்கு ஒருவித மனச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது,'' என்று விவரித்தனர்.
 
விர்ச்சுவல் உலகத்தில் தன்னை தாக்குபவர்களை எப்படி கேமில் உள்ள ஆயுதங்களை வைத்து அடித்து தாக்கி விளையாடுவாரோ, அதேபோல நிஜ உலகில் நடந்துகொள்ள தொடங்கினார் மனநிலை பாதிக்கப்பட்ட மாணவர்.
 
நடவடிக்கையில் மாற்றம்
மாணவர் தன்னை வீடியோ கேமில் உள்ள சக்தி வாய்ந்த ஒரு நபராக தன்னை கற்பனை செய்துள்ளார். அவர் அந்த விர்ச்சுவல் உலகத்தில் தன்னை தாக்குபவர்களை எப்படி கேமில் உள்ள ஆயுதங்களை வைத்து அடித்து தாக்கி விளையாடுவாரோ, அதேபோல நிஜ உலகில் நடந்துகொள்ள தொடங்கியபோதுதான் சிக்கல் ஆரம்பித்தது.
 
இந்த மாணவருக்கு ஏற்பட்ட நிலை ஒரு மனநிலை பாதிப்பின் ஒரு கட்டம் என்றும் உடனடியாக இதுபோல பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை கொடுக்கவில்லை எனில், மோசமான மன பாதிப்புக்கு ஆளாகுவார்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மன பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமல், ஒரு மாயை உலகத்தில் வாழத் தொடங்கியதால் இந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்தனர்.
 
கேம் மற்றும் மொபைல் போன் பயன்பாட்டுக்கு அடிமையானவர்களில் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்கள் கூட இருக்கிறார்கள் என்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை மருத்துவர்கள் சொல்கின்றனர்.
 
அதாவது ஒரு நபர் தனக்கான பாதுகாப்பு, அரவணைப்பு, அன்பு அல்லது எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள் போன்றவற்றை பெற முடியாத நேரத்தில், அவர் தனக்கு எளிதில் அணுகல் உள்ள பொருள் எதுவோ அதனை திரும்பத்திரும்ப பயன்படுத்துவார்கள்.
 
வீடியோ கேம்முக்கு அடிமையான மாணவனுக்கு நிஜ உலகில் நடந்த துயரம்பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
வீடியோ கேமிலிருந்து கிடைக்கும் வெற்றியில் இருந்து அவர்கள் மீண்டுவர தயங்குவார்கள் மாணவர்கள்.
 
வங்கியை விட அதிக வட்டி - அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 8 சேமிப்புத் திட்டங்கள்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
ஜெகத்ரட்சகன்: ரயில்வே ஊழியர் பணக்கார அரசியல்வாதியானது எப்படி? ஐ.டி. ரெய்டின் பின்னணி என்ன?
2 மணி நேரங்களுக்கு முன்னர்
அந்த பயன்பாட்டில் தங்களுக்கு மகிழ்ச்சி கிடைப்பதாக எண்ணுவார். அதில் கிடைக்கும் வெற்றியில் இருந்து அவர்கள் மீண்டுவர தயங்குவார், மீண்டும்மீண்டும் அதே செயலை செய்வார். இதுபோன்ற மனச்சிதைவு பிரச்னைக்கு அடிமையானவர்களை அவர்கள் செய்யும் செயலில் இருந்து உடனே தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக, படிப்படியாக அவர்களின் ஈடுபாட்டை குறைப்பதுதான் சரி என்பதுதான் இந்த மருத்துவர்களின் அறிவுரை.
 
இந்த மாணவருக்கு முன்னதாக இதேபோன்ற மன சிதைவுக்கு ஆளாகி சிகிச்சை எடுத்துக்கொண்ட இரண்டு நபர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மருத்துவர்கள் விளக்கினர்.
 
ஏற்கனவே மன பாதிப்பில் இருந்த ஒரு நபர், தனது வீட்டில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால், தனது வீட்டுக்கு அருகில் யாரோ வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள் என தொடர்ச்சியாக காவல்துறை உதவி எண்ணுக்கு அழைத்து புகார் கொடுத்து கொண்டே இருந்தார். உண்மையில், அதுபோன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால், அந்த நபருக்கு தனக்கு பாதுகாப்பில்லை என்ற உணர்வில் இருந்து மீள்வதற்கு யாருடனாவது பேச வேண்டும் என்ற உந்துதல் தொடர்ந்து நீடித்தது.
 
அதனால், காவல்துறைக்கு போனில் புகார் செய்வதன் மூலம் திருப்தி அடைந்துகொண்டார். இந்த நபருக்கு அவரிடம் அவர் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தி, அவருக்கென நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்தி பிறரிடம் பேச வைத்தோம். மூன்று மாதங்கள் கழித்து அவர் அந்த சிதைவில் இருந்து மீண்டார். மொபைல் போனை அவரிடம் இருந்து பறித்து வைப்பது பிரச்னையை தீர்க்காது.
 
வீடியோ கேம்முக்கு அடிமையான மாணவனுக்கு நிஜ உலகில் நடந்த துயரம்பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
பெற்றோரிடம் ஸ்க்ரீன் டைம்ஐ குறையுங்கள், கேம் விளையாடுவதை உடேன தடுக்காதீர்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
 
ஜெகத்ரட்சகன்: ரயில்வே ஊழியர் பணக்கார அரசியல்வாதியானது எப்படி? ஐ.டி. ரெய்டின் பின்னணி என்ன?
2 மணி நேரங்களுக்கு முன்னர்
சைபர் கிரைம் மோசடியில் இழந்த பணத்தை இரண்டே நாட்களில் மீட்க முடியும் - எப்படி தெரியுமா?
4 மணி நேரங்களுக்கு முன்னர்
மற்றொரு குழந்தை,வீடியோ கேம் விளையாட்டில் அதிக நேரம் செலவிட்டதால், குறைவான மதிப்பெண்களை பெற்றான். உடனே பெற்றோர்கள் கேம் செட்டை தரவில்லை. அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் கேம் செட் தரமுடியும் என்று சொல்லிவிட்டனர். ஆனால், அந்த குழந்தை அடுத்த தேர்வில் அதைவிட குறைந்த மதிப்பெண்ணைதான் எடுத்தது. தன்னுடைய விர்ச்சுவல் உலகத்தை துலைத்துவிட்டோம் என்ற எண்ணம் அந்த குழந்தைக்கு இருந்தது.
 
அதனால், பெற்றோரிடம் ஸ்க்ரீன் டைம்ஐ குறையுங்கள், கேம் விளையாடுவதை உடேன தடுக்காதீர்கள் என்று அறிவுறுத்தினோம். அதேபோல, பெற்றோரும் மொபைல் போன் பயன்பாட்டை குறைத்து, குழந்தையிடம் நேரம் செலவிடவேண்டும், விளையாடவேண்டும் என்றோம். இரண்டு மாதங்களில் அந்த குழந்தையை மனசிதைவில் இருந்து மீட்கமுடிந்தது.
 
வீடியோ கேம்முக்கு அடிமையான மாணவனுக்கு நிஜ உலகில் நடந்த துயரம்பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
ஒரு நபர் மற்ற வேலைகளை விட வீடியோ கேம் விளையாட்டில் அதிக நேரம் செலவிடுவது வீடியோ கேமுக்கு அடிமையாவதற்கான அறிகுறியாகும்.
 
வீடியோ கேம்முக்கு அடிமையாகுவதை எப்படி கண்டறியலாம்?
ஆன்லைன் விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடி அடிமையாகும் நிலையை 'கேமிங் டிஸ்சாடர்'(Gaming Disorder) என உலகசுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது.
 
ஒரு நபர் வீடியோ கேம்முக்கு அடிமையாகும் நிலையை உணர்த்தும் சமிக்கைகள் என்ன என்று நிபுணர்கள் வரையறுத்துள்ளனர்.
 
1) ஒரு நபர் மற்ற வேலைகளை விட வீடியோ கேம் விளையாட்டில் அதிக நேரம் செலவிடுவது
 
2)வீடியோ கேம் விளையாட வாய்ப்பில்லாதபோது அவர் சோகம் அல்லது விரக்தியாக இருப்பது
 
3)தனித்து இருப்பது/ முன்னர் அவருக்கு விளையாட்டு அல்லது பிற செயல்களில் உள்ள நாட்டம் குறைந்துபோவது.
 
4)பிடித்த உணவு, பொழுதுபோக்கை புறக்கணிப்பது
 
5)படிப்பு அல்லது வேலையில் கவனமின்மை அல்லது குறைந்த ஈடுபாடு
 
6)எரிச்சல், கோபம் கொள்வது
 
7)தனக்கென உள்ள நண்பர்கள் வட்டத்தில் இருந்து பிரிந்து இருப்பது
 
வீடியோ கேம்முக்கு அடிமையான மாணவனுக்கு நிஜ உலகில் நடந்த துயரம்பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
இந்த விளையாட்டுகளை விளையாடும் கணினி மற்றும் விர்ச்சுவல் விளையாட்டு செட்களின் விலை குறைந்துள்ளது என்பதால், இதனை எளிதாக வாங்கிவிடமுடியும்.
 
சைபர் கிரைம் மோசடியில் இழந்த பணத்தை இரண்டே நாட்களில் மீட்க முடியும் - எப்படி தெரியுமா?
4 மணி நேரங்களுக்கு முன்னர்
ஜெகத்ரட்சகன்: ரயில்வே ஊழியர் பணக்கார அரசியல்வாதியானது எப்படி? ஐ.டி. ரெய்டின் பின்னணி என்ன?
2 மணி நேரங்களுக்கு முன்னர்
வீடியோ கேம் உருவாக்குபவர்களின் பொறுப்பு
உலகளவில் தினமும் ஆயிரக்கணக்கான புதிய விளையாட்டுகள் அறிமுகம் ஆகின்றன. முன்பைவிட இந்த விளையாட்டுகளை விளையாடும் கணினி மற்றும் விர்ச்சுவல் விளையாட்டு செட்களின் விலை குறைந்துள்ளது என்பதால், இதனை எளிதாக வாங்கிவிடமுடியும். ஆன்லைன் சந்தைகள் மட்டுமல்லாமல், சிறிய கடைகளில் கூட இந்த கேம் செட்கள் கிடைப்பதால், அணுகல் என்பது மிகவும் எளிதாகிவிட்டதும் ஓரு காரணமாக பார்க்கப்படுகிறது.
 
விளையாடும் நபர்களின் பாதுகாப்பை கேம் தயாரிப்பாளர்கள் எந்தவிதத்தில் உறுதி செய்யமுடியும் என ஆன்லைன் விளையாட்டை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவரும் ஸ்ரீகுமாரிடம் கேட்டோம். இவர் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் விளையாட்டு மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்.
 
''பெரும்பாலான ஆன்லைன் விளையாட்டுகளில் வயதுவரம்பு 18 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால், விளையாட்டை விளையாடுபவர்தான், எத்தனை மணி நேரம் விளையாடலாம் என்று முடிவு செய்யவேண்டும்,''என்கிறார்.
 
அதனால், விளையாடும் நேரத்தை முறைப்படுத்தும் வசதிகள் இன்பில்ட்டாக (inbuilt) பெரும்பாலும் இல்லை என்பது தெளிவாகிறது.விளையாட்டை உருவாக்குபவர்கள் தங்களது தயாரிப்பு அதிகமாக விற்பனை ஆகவேண்டும், அதிகமாக பயன்படுத்தவேண்டும் என்றுதான் விரும்புவார்கள் என்பதால், அதில் குறிப்பிட்ட நேரத்தில் விளையாட்டை நிறுத்தும் வசதிகள் இல்லை என்று விளக்குகிறார் ஸ்ரீகுமார்.
 
வீடியோ கேம்முக்கு அடிமையான மாணவனுக்கு நிஜ உலகில் நடந்த துயரம்பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
அலாரம் செட் செய்து, 'ஸ்க்ரீன் டைம்'ஐ (கணினி திரையை பார்க்கும் நேரம்)நெறிப்படுத்தலாம்
 
தேவைப்பட்டால், அலாரம் செட் செய்து, 'ஸ்க்ரீன் டைம்'ஐ (கணினி திரையை பார்க்கும் நேரம்)நெறிப்படுத்தலாம் என்பதை ஒரு வாய்ப்பாக சொல்கிறார். மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பல பிளேஸ்டோர்களில் வன்முறை நிறைந்த விளையாட்டுக்கு கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் விளையாட்டில் ஒருவர் எவ்வளவு மணிநேரம் செலவிடுகிறார்கள் என்பதற்கான வரைமுறைகள் இல்லை என்றும் உறுதிபடுத்துகிறார்.
 
பெரும்பாலான விளையாட்டுகள் இலவசமாக டவுன்லோட் செய்து விளையாடும் விதத்தில் இருக்கின்றன. ஒரு சில விளையாட்டுகளில், முதல் சில சுற்றுகள் இலவசமாக விளையாடலாம். மற்ற சுற்றுகளை விளையாட அல்லது அதில் சில கருவிகளை வாங்க, பணம் செலுத்தவேண்டிய தேவை ஏற்படும். குறைந்தபட்சமாக பெற்றோர் பணம் செலுத்தும் சமயத்தில்அதனை சோதிக்கலாம் என்பதுதான் தற்போதுள்ள ஒரே வாய்ப்பு என்றும் தெரிந்துகொண்டோம்.
 
சட்டவிதிகள் சொல்வது என்ன?
அடுத்ததாக சட்டப்படி கேம் தயாரிக்கும் நிறுவனங்களை முறைப்படுத்தும் அமைப்பு எதுவும் உள்ளதா என்று தெரிந்துகொள்வதற்காக சைபர் வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் கார்திகேயனிடம் பேசினோம்.
 
ஆன்லைன் விளையாட்டுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பலவும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களாக இருப்பதால், அவற்றின் அலுவலகங்களும் எங்கு செயல்படுகின்றன என்பது சரியாக தெரியாத நிலையில், இந்திய சட்டப்படி ஒரு விளையாட்டை தடை செய்தால்கூட, அதனை, ஹேக் செய்து விளையாடும் நடைமுறைதான் தற்போதுவரை நீடிக்கிறது என்கிறார் அவர்.
 
''பரிசு பணம் வெல்லும் விளையாட்டுகளுக்கு சில விதிமுறைகள் உள்ளன. ஆனால் அதில், பரிசை வெல்லும் நபர் வரி செலுத்துவது பற்றிய விதிமுறைகள்தான் உள்ளன. வீடியோ கேம் விளையாட்டுக்கு ஒருவர் அடிமையாகுவதை தடுப்பது தொடர்பான விதிமுறைகள் எதுவும் இல்லை. விளையாட்டை தொடங்கும் போது, ஒரு படிவம் தரப்படும், அதில் 18 வயது நிரம்பியவர் என்ற பெட்டியை டிக் செய்துவிட்டால், அந்த விளையாட்டால் ஏற்படும் பிரச்னைக்கு அந்த நபரே பொறுப்பேற்கவேண்டும். பெற்றோரின் கண்காணிப்பில் விளையாடும் குழந்தைகளுக்கு, பெற்றோர் பொறுப்பேற்கவேண்டும். வேறு விதிமுறைகள் இல்லை,''என்கிறார்.
 
இஸ்ரேல் - பாலத்தீனம்: இந்தியாவில் மத ரீதியான பிளவு ஏன்? அதில் பா.ஜ.க. பங்கு என்ன?
3 மணி நேரங்களுக்கு முன்னர்
வங்கியை விட அதிக வட்டி - அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 8 சேமிப்புத் திட்டங்கள்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
அரசாங்கத்தின்அறிவுறுத்தல்
சமீபத்தில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு குழந்தைகள் அடிமையாகுவது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சில ஆலோசனைகளை வழங்கியது. அதில், கொரோனா ஊரடங்கு காலம் முதல் இந்தியாவில் குழந்தைகளிடம் ஆன்லைன் கேம் மீதான மோகம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
வெகு எளிதாக எல்லா வீடுகளிலும் இருக்கும் மொபைல் அல்லது கணினியில் விளையாடமுடியும் என்பதால், பல குழந்தைகள் எளிதில் இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
 
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆன்லைன் கேம் விளையாட்டை விளையாடும் குழந்தைகளின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டால், உடனே அதற்கு கவனம் கொடுக்கவேண்டும் என்றும் பணம் செலவிட்டு விளையாடும் விளையாட்டுகள் தொடர்பாக பெற்றோர்கள் யோசித்து முடிவு செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கேம் விளையாடும் போது பண மோசடி ஏற்பட்டால் அல்லது விளையாடுபவரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டால், புகார் அளிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான புகார் அளிக்க 1930 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக தலைமையில் வலுவான கூட்டணி!-பாஜக தேசிய பொதுச்செயலாளர்