உடல் எடையை குறைக்க பலர் மணி கணக்கில் ஜிம் சென்று வொர்க் அவுட் செய்து வரும் நிலையில் ஜிம் செல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்
காலையில் எலுமிச்சை பழ நீரை குடிப்பது உடல் எடை மாற்றத்தை அதிகரிக்கும் என்றும் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது.
மேலும் காய்கறிகளால் ஆன சாலட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றும் சாலட் சாப்பிடுவது செரிமானத்திற்கு சிறந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உணவிற்கு முன் சாலட் சாப்பிடுவதால் வயிறு நிரப்பி குறைவாக சாப்பிடுவோம் என்றும் அதிகமாக சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படும் என்றும் இதனால் அதிக கலோரிகள் உட்கொள்ளாமல் குறைவான கலோரிகள் உடலுக்கு செல்லும் என்றும் இதன் மூலம் உடல் எடை மிக வேகமாக குறையும் என்று கூறப்படுகிறது.
மேலும் இரவில் ரொட்டி அல்லது சாதம் ஆகிய இரண்டையும் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
தாமதமாக சாப்பிடுவதால் உடல் கொழுப்பு சரியாக எரிக்கப்படாது என்றும் எனவே இரவு ஏழு மணிக்கு முன்பாக சாப்பிட விட வேண்டும் என்றும் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட வேண்டும் என்றும் இதனால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும் உணவில் கீரை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கிழங்கு வகைகள் பழங்கள் அதிகமாக செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மேற்கண்டவற்றை கடைபிடித்தால் உடல் எடை மிக எளிதில் குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.