உடல் எடையை குறைக்க டயட் கடைப்பிடித்தாலும் விட்டமின் டி போதுமான அளவிற்கு உடலுக்கு கிடைத்தால் போதும்.
உடல் எடையை குறைக்க பலரும் டயட் கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. உணவு கட்டுபாடு, உடற்பயிற்சி ஆகியவை இருந்தும் சிலர் உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆய்வு ஒன்றில் உணவு கட்டுபாட்டையும் தாண்டி உடல் எடையை குறைக்க அவசியமான ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் எடையை குறைக்க விட்டமின் டி மிகவும் அவசியமானதாகும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக சூரிய ஒளி மூலம் தேவையான விட்டமின் டி நமக்கு கிடைக்கிறது. இதையும் கடந்து சில உணவுகள் மூலம் உடலிற்கு விட்டமின் டி பெறலாம்.
காட் லிவர் ஆயில், சால்மன் மீன், டூனா மீன், பால், முட்டை, மாட்டுக்கறி, வெண்ணெய், காளான் ஆகியவற்றில் விட்டமின் டி கிடைக்கிறது.
எனவே உடல் எடையை குறைக்க உடலிற்கு தேவையான விட்டமின் டி எடுத்துக்கொள்வது அவசியம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.