Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டீ , காபி குடித்தால் தலைவலி போகுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Advertiesment
Coffee

Mahendran

, செவ்வாய், 23 ஜூலை 2024 (20:21 IST)
பொதுவாக தலைவலிக்கிறது என்றால் டீ அல்லது காபி குடித்தால் சரியாகிவிடும் என்ற மனப்பான்மை பலரிடம் இருக்கும் நிலையில் இது குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்
 
டீ குடிப்பது என்பது தற்போது கிட்டத்தட்ட அனைவருக்கும் ஒரு வழக்கமாகிவிட்ட நிலையில் டீ குடிப்பதால் ஒரு சில நன்மைகள் கிடைக்கும் என்றும் அனைத்து குடும்பங்களிலும் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது
 
ஆனால் பலருக்கு டீ குடித்தால் தலைவலி தீரும் என்று கூறுவது தான் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ ஆகியவை உடலுக்கு நன்மைகளை செய்யலாம். ஆனால் பால் சேர்த்து டீ குடிப்பது தான் பெரும்பாலானோர் பழக்கமாக உள்ளது 
ஆனால் டீ கொடுத்தால் தலைவலி தீரும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும் அதே நேரத்தில் டீ கொடுத்தால் தலைவலி தீரும் என்ற நம்பிக்கை இன்னும் பலரிடம் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்
 
ஒற்றை தலைவலி இருந்தால் இஞ்சி டீ குடிக்கலாம் என்றும் அது ஒற்றைத் தலைவலியை தீர்க்கும் என்றும் கூறப்பட்டு வருகின்றன. பொதுவாக டீயில் இஞ்சி ஏலக்காய் இலவங்கப்பட்டை போன்ற மசாலா பொருட்கள் சேர்த்தால் அவை தலைவலி உள்பட சில பிரச்சனைகளை தீர்க்கும் என்பது நம்பப்பட்டு வருகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் தேநீர் அருந்துவதை தவிர்க்குமாறு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் மலம் கருப்பாக வெளியேறுகிறதா? அது எவ்வளவு ஆபத்தானது?