Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 26 March 2025
webdunia

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படுமா?

Advertiesment
sugar
, திங்கள், 15 மே 2023 (18:50 IST)
சர்க்கரை நோய் என்பது சர்க்கரை அளவை அதிகப்படுத்துவது மட்டுமின்றி சில துணை நோய்களையும் கொண்டு வந்து விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர் 
 
அந்த வகையில் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்யாசமாக இருக்கும் என்றும் குறிப்பாக டைப் 2 என்ற சர்க்கரை நோய் பெண்களுக்கு இதய நோயை வரவழைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆண்களை விட பெண்களுக்கு தான் இதய சிக்கல்கள் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பாக சர்க்கரை நோய் இருக்கும் பெண்களுக்கு இதய சிக்கல்கள் அதிகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 
அதேபோல் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தகுந்த மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புற்றுநோய் வருவது ஏன்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!