சர்க்கரை நோயாளிகள் இரவில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் ஊற வைத்த வெந்தய தண்ணீரை குடிப்பது நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு தகுந்த மருத்துவ முறைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் ஊற வைத்த வெந்தயத்தை மறுநாள் காலை வெந்தய தண்ணீரை குடித்தால் மிகவும் நல்ல பயன் கிடைக்கும்.
வெந்தயத்தில் ஹைட்ராக்சி லியூஸின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் அது இன்சுலினை அதிக அளவு சுரக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் வெந்தயத்தை கர்ப்பமான பெண்கள் சாப்பிடக்கூடாது என்றும் அது எதிர் செயல் புரிவதால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
வெந்தயத்தில் உள்ள கேலக்ட்டோமேனான் என்ற நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உறிஞ்சுதலை வயிற்றில் குறைத்து குளுக்கோஸ் குறைபாடு வராமல் தடுப்பதாக கூறப்படுகிறது.