Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகம் பளபளப்பாக மின்ன சில பேஷியல் முறைகள்...!

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (13:41 IST)
பொதுவாக குளிர் காலத்தில் பனியின் கரணமாக அனைவரின் முகமும் வறண்டு விடும். இந்த நிலையை மாற்றி உங்கள் முகம் பட்டுபோல் மின்ன உதவும்  ஐந்து ஃபேஷியல் முறைகள்.
1. பாதாம் ஃபேஷியல்: பாதாம் பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, தோலை நீக்கி அரைத்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிது கடலை மாவு, பால் மற்றும்  எலுமிச்சை சாறு சேர்த்து, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முகத்தில் பூசி வந்தால், நீங்கள் பியூட்டி பார்லருக்கு போக வேண்டியதே இல்லை
 
 2. மஞ்சள் ஃபேஷியல்: மஞ்சள் தூள், சந்தனம், பால், பாதாம் எண்ணெய், எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றினால் உங்கள் சருமம்  அடைந்திருக்கும் அழகான மாற்றத்தை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
 
 3. தேன் ஃபேஷியல்: 1 ஸ்பூன் பால் பவுடர், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசி  15  நிமிடங்கள் வைத்தால் வறண்ட சருமம் மிருதுவாக மாறும்.
 
  4. ஓட்ஸ் ஃபேஷியல்: ஓட்ஸ், தயிர் , தக்காளி பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் நிமிடத்தில்  உங்களின் சரும நிறம் பொலிவடைந்திருப்பதை உணரலாம்.
 
 5. எலுமிச்சை ஃபேஷியல்: 1/2 கப் பாதாம் எண்ணெய் இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும் முகத்தை  நன்றாக கழுவி, காய்ந்தவுடன் இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவவும். நன்றாக தேய்த்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வி எஸ் மருத்துவ அறக்கட்டளை சார்பில் துல்லிய புற்றுநோய் சிகிச்சைக்கான மாநாடு

காய்ச்சலுக்கு இளநீர்: பலன் அளிக்குமா, பாதுகாப்பானதா?

சமையலறைப் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: எச்சரிக்கை!

சிறுநீரை அடக்கி வைப்பதா? ஆபத்தான விளைவுகள் காத்திருக்கின்றன - மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

அடுத்த கட்டுரையில்
Show comments