Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம்!

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம்!
, வியாழன், 24 மே 2018 (16:55 IST)
தினமும் சமையலில் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

 
ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும்   
உடல் சமநிலைக்கு வந்துடும். சின்ன வெங்காயத்தை பொடி போன்று நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்துசாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.
 
மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர நல்ல பலன் தரும்.
 
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
 
வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக்குடிக்க இருமல் குறையும்.
 
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாவீரர்களுக்கு வீர வணக்கம்...