பெண்கள் அனைவரும் பொலிவான, ஆரோக்கியமான சருமத்தை விரும்புவார்கள். ஆனால் காலநிலை மாற்றம் சருமத்தின் தன்மையையும் பாதிக்கக்கூடும். சருமத்தை துல்லியமாக பராமரிக்க, தினசரி பழக்கவழக்கங்கள் சில மாற்றங்களை செய்யலாம்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் அவசியம். குறைந்தது SPF 15 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீன் தினமும் பயன்படுத்த வேண்டும். இது புற ஊதாக்கதிர்கள் உண்டாக்கும் பாதிப்புகளை குறைத்து, சருமத்தின் முதுமை தோற்றத்தை தடுக்க உதவும். வெயில், மழை, குளிர் எந்த பருவ நிலையாக இருந்தாலும் சன்ஸ்கிரீன் தவறாமல் பயன்படுத்துவது முக்கியம்.
தண்ணீர் பருகுவது சருமத்திற்கு நன்றாக உதவும். தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மேலும், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதும் சரும ஈரப்பதத்தை தக்க வைத்திடும். பழங்கள், காய்கறிகள், புரோபயாடிக் உணவுகளை உட்கொள்வது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து வழங்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை போன்ற இயற்கை பொருட்கள் சரும பொலிவை அதிகரிக்க உதவுகின்றன. முகத்திற்கு தயிர் பூசுவதும், நேராக கற்றாழை ஜெல் பயன்படுத்துவதும் நல்ல பலனை தரும். சிலருக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடியதால், புதிய பொருட்களை பயன்படுத்தும் முன் சிறிதளவு பரிசோதித்து பார்க்க வேண்டும்.