Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முகத்தில் சரும துளைகள், கரும்புள்ளிகள் ஏற்பட என்ன காரணம்?

Advertiesment
face cream

Mahendran

, வியாழன், 6 பிப்ரவரி 2025 (18:45 IST)
சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் மற்றும் வியர்வை காரணமாக முகத்தில் சரும துளைகள் உருவாகின்றன. இதனால் சருமம் பிரகாசமற்றதாக மாறிவிடும். இந்த திறந்த துளைகள் தோற்றத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அதில் தூசி, பாக்டீரியா போன்றவை தேங்கி பருக்கள், கரும்புள்ளிகள் உள்ளிட்ட பல தோல் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். இதன்மூலம் சருமம் விரைவாக வயதான தோற்றம் பெற வாய்ப்பு உள்ளது.
 
இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்ய கூடாது:
 
வெந்நீரில் முகம் கழுவ வேண்டாம்: வெந்நீர் சருமத்தின் துளைகளை மேலும் விரிவாக்கி, அதிக எண்ணெய் உற்பத்தியை தூண்டலாம். எனவே, எப்போதும் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.
 
அதிக அளவில் மேக்கப் பயன்படுத்த வேண்டாம்: கனமான அல்லது அதிக அளவில் மேக்கப் பயன்படுத்துவதால், அது துளைகளில் தேங்கி போகும். இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். ஒப்பனை தேவையானால், துளைகளை அடைக்காத லேசான பொருட்களை தேர்ந்தெடுக்கவும்.
 
முகத்தை அதிகமாக தேய்த்து சுத்தம் செய்யக்கூடாது: ஒரு நாளைக்கு அதிக முறை முகத்தை கழுவுவது சருமத்தை உலர்ச்சியடையச் செய்து, துளைகளை மேலும் பெரிதாக்கும். எனவே, மென்மையாக சுத்தம் செய்யவும்.
 
திறந்த துளைகளை தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும்?
 
முகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்: துளைகள் அடைக்கப்படாமல் இருக்க முக சுத்தம் அவசியம். உங்கள் சருமத்திற்கேற்ப ஒரு நல்ல கிளென்சரைப் பயன்படுத்தி, தினமும் இருமுறை முகத்தை சுத்தம் செய்யவும்.
 
எக்ஸ்ஃபோலியேஷன் செய்யவும்: வாரத்திற்கு 1-2 முறை உரித்தல் (Exfoliation) செய்ய வேண்டும். இது துளைகளின் அளவைக் குறைக்கும் மற்றும் அழுக்குகளை நீக்கும்.
 
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் திறந்த துளைகள் குறைந்து, உங்கள் சருமம் ஆரோக்கியமாக மிருதுவாக இருக்கும்! 
     
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்களின் கருவளையத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்?