பெண்கள் ஆண்களை விட அதிகம் பாதிக்கப்படும் பெருங்குடல் புற்றுநோய், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடலில் உருவாகும் கட்டியால் உருவாகும் நோயாகும். இது மலத்தில் ரத்தம் காணப்படுதல், வயிற்று வலி, எடை குறைதல் போன்ற அறிகுறிகளுடன் தோன்றும். பெரும்பாலானோர் இதனை சுலபமாக கண்டுபிடிக்கவில்லை என்பதால் தாமதமாகி உயிரிழப்பு அதிகரிக்கிறது.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோய் பாதித்து உள்ளதா அடிக்கடி பரிசோதனை செய்யவேண்டும். கொலோனோஸ்கோபி, மல பரிசோதனை போன்றவை மூலம் ஆரம்ப கட்டத்தில் கண்டறியலாம். உணவுப் பழக்கங்களில் மாற்றம், உடற்பயிற்சி, புகை மற்றும் மதுபானத்தை தவிர்த்தல் போன்றவை இந்த நோயைத் தடுக்கும் வழிமுறைகளாகும்.
முக்கியமானது விழிப்புணர்வும், தாமதமின்றி பரிசோதனை செய்தல் மட்டுமே உங்கள் உயிரை காக்கும்!