ரம்புட்டான் பழம்: சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த பழம்

Mahendran
புதன், 3 செப்டம்பர் 2025 (21:00 IST)
முள் நிறைந்த வெளிப்புற தோற்றத்தை கொண்டிருந்தாலும், ரம்புட்டான் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பழமாகும். 
 
ரம்புட்டானில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
 
இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால், அதிகப்படியாக சாப்பிடும் எண்ணம் குறையும்.
 
ரம்புட்டானில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், உடல் வறண்டு போவதைத் தடுக்க உதவுகிறது. ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.
 
இதில் பாஸ்பரஸ் இருப்பதால், சிறுநீரகத்திலிருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.ரம்புட்டானை தொடர்ந்து சாப்பிடுவதால் தோல், முடி மற்றும் நகங்கள் பளபளப்பாக இருக்கும்.
 
ரம்புட்டான் பழத்தை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கர்ப்பிணிகள் போன்றோர் மருத்துவ ஆலோசனையின்றி அதிகம் உட்கொள்ள வேண்டாம். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்டு எலிகளால் கல்லீரல் பாதிப்பு அபாயம்: சென்னை ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

உடற்பயிற்சியும் இதய ஆரோக்கியமும்: இதய நோய்களைத் தடுப்பதற்கான வழிகள்!

உணவகங்களில் சாப்பிட்ட பின் பெருஞ்சீரகம் கொடுப்பது ஏன்?

மெட்டி அணிவது அறிவியல் ரீதியில் ஆரோக்கியமானதா? ஆச்சரிய தகவல்..!

மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்: நினைவாற்றல் மற்றும் கவனம் அதிகரிக்க வழிகள்

அடுத்த கட்டுரையில்
Show comments