Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முத்தான பத்து மருத்துவ குறிப்புகள்

Advertiesment
முத்தான பத்து மருத்துவ குறிப்புகள்
, திங்கள், 17 செப்டம்பர் 2018 (14:25 IST)
அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படுகிற சில முக்கியமான நோய்களுக்கு கீழ்கண்ட மருத்துவ முறைகளின் மூலம் தீர்வு காணலாம்.

1) இருமல் மற்றும் சளியால்  மூச்சு விடமுடியாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சரியான அளவில் சிறிதளவு கொடுத்து வந்தால்  சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும்.

2) சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதிலுள்ள கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் சாப்பிட்டால் அல்சர் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும். 

3) அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் சூடும் தணியும். 

4) தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகத்தில் பொழிவு அதிகரிக்கும். 

5) இரவில் துக்கம் வராமல் துன்பப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீர் குடித்துவிட்டு பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம். 

6) சர்க்கரை நோய் கட்டுப்பட வேண்டுமானால் வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.

7) செம்பருத்திப் பூவை வெயிலில் காயவைத்து உலர்த்தி தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை ஒழிவதுடன்  நன்கு தலை முடியும் வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களும் உடலும் குளிர்ச்சி அடையும்.

8) எந்த மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் வீரியத்தைக் குறைத்துவிடும்.எனவே மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மது,மற்றும் புகை பிடித்தலை தவிர்த்தல் நல்லது. 

9)  உடல் ஏற்படும் வெளுப்பு மற்றும் தேமல் நோய் குணமாக சிறந்த மருத்துவ குணம் உள்ள வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துக் குளித்து வர நல்ல மாற்றம் ஏற்படும். 

10) ரத்த அழுத்தம் மற்றும் இரத்தக் கொதிப்பு நோய் முற்றிலும் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர விரைவில் நோய் கட்டுக்குள் வரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க...