உடல் எடைக்கும் கொலஸ்ட்ராலுக்கும் தொடர்பு உண்டா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Mahendran
சனி, 1 நவம்பர் 2025 (19:00 IST)
ஒல்லியானவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்ற பொதுவான கருத்து தவறானது என்கிறார் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவரின் உடல் எடைக்கும், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பதே உண்மை.
 
கொலஸ்ட்ரால் என்பது கல்லீரலால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவது. இது ஹார்மோன் உற்பத்தி மற்றும் நரம்பு மண்டலச் செயல்பாட்டிற்கு அவசியம். இது அதிகரிக்கும்போது, இரத்தக் குழாய் அடைப்பை ஏற்படுத்தி இருதய நோய்களை உருவாக்கும்.
 
கொலஸ்ட்ரால் உயர்வுக்கு 80% காரணம் மரபணு பின்னணிதான். கல்லீரலின் உற்பத்தி திறன் பரம்பரை தன்மையை பொறுத்தது.  அசைவ உணவுகளில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதால், அது 20% உயர்வுக்கு காரணமாகிறது.
 
உடல் பருமனுக்கு காரணம் தோலுக்கு கீழே சேரும் 'சப்-கியூட்டேனியஸ் கொழுப்பு'தான்; இது இரத்த கொலஸ்ட்ராலுடன் தொடர்புடையது அல்ல.
 
குடும்ப வரலாற்றில் இதயநோய் அபாயம் உள்ளவர்கள் மற்றும் அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தோற்றத்தை கருதாமல், இரத்தப் பரிசோதனை மூலம் கொலஸ்ட்ரால் அளவை தெரிந்துகொள்வது அவசியம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் எடைக்கும் கொலஸ்ட்ராலுக்கும் தொடர்பு உண்டா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான 6 முக்கிய காரணங்கள்!

மூன்று வேளை உணவை விட இது ரொம்ப முக்கியம்.. ஆரோக்கியம் குறித்த டிப்ஸ்..!

சர்க்கரை நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய ஏ.ஐ. ஆய்வு!

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments