கோடைக்கு தினமும் ஒரு முலாம்பழம்!

வெள்ளி, 16 மார்ச் 2018 (17:34 IST)
முலாம்பழம் வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை போக்குகிறது. சிறுநீர் எரிச்சலை தடுக்கும். மிகுந்த சத்து நிறைந்த உணவாகிறது. 

 
மலிவாக கிடைக்க கூடிய முலாம்பழத்தை பயன்படுத்தி உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தலாம். கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். 
 
விதைகள் நீக்கிய முலாம்பழத்துடன், கால் ஸ்பூன் சீரகப் பொடி, 2 சிட்டிகை சுக்குப் பொடி, சிறிது பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர வயிற்று வலி, வயிற்றுபோக்கு சரியாகும். 
 
சிறுநீர் பெருக்கியாக விளங்கும் இது சிறுநீர் எரிச்சலை தடுக்கிறது. முலாம்பழம் உள் உறுப்புகளின் உஷ்ணத்தை குறைக்கிறது. புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், விட்டமின் ஏ, சி என்று பலவிதச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஏலக்காய் டீ செய்து குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா...!