நீர்ச்சத்து கொண்ட கோடைக்கால சிறப்பு உணவுகள்!

புதன், 7 மார்ச் 2018 (15:52 IST)
கோடைக்காலத்தில் எந்த அளவுக்கு காய்கறிகளையும், பழங்களையும் அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலிற்கு நல்லது. 

 
கோடைக்காலத்தில் உடலிற்கு நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறி மற்றும் பழங்களில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக வெள்ளரி, தக்காளி தர்ப்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, வெங்காயம் ஆகியவை கோடைக்காலத்திற்கு ஏற்ற சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்கள்.
 
தக்காளி - தக்காளி அதிக தண்ணீர் சத்து உடையது. தக்காளியில் உள்ள "லைக்கோபீன்" என்ற வேதிப்பொருள் நமது சருத்தை வெயிலில் இருந்து பாதிக்கப்படாமல் காக்கிறது. 
 
வெங்காயம்: வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அரிப்பு வராது. வெங்காயத்தில் உள்ள "குவர்சடின்" என்று வேதிப்பொருள் அதற்கு உதவுகிறது.
 
வெள்ளரி - உடம்பில் தாது உப்புகளின் சமநிலையைக் காக்க வெள்ளரி உதவுகிறது. வெள்ளரியின் தோலில் அதிகமாக "ஸ்டீரால்" உள்ளது. எனவே வெள்ளரியைக் கழுவிவிட்டு தோலைச் சீவாமலே சாப்பிடலாம்.
 
தர்ப்பூசணி - தண்ணீர்ச் சத்து நிறைந்த தர்ப்பூசணி, வெயில் காலத்தைச் சமாளிக்க ஏற்ற ஒன்று. தர்ப்பூசணியில் நார்ச்சத்து அதிகமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பூண்டு