50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பக்கவாத நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நோய் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களையே அதிகம் பாதிக்கிறது என்றும் நமது உடலில் உள்ள உறுப்புகள் செயல்பாட்டில் குறைவு ஏற்படும் போது இந்த நோய் வருகிறது என்றும் கூறப்படுகிறது.
உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின் மூலம் உறுப்புகளை இயங்கச் செய்யும் ரத்த ஓட்டம் குறைவதால் பக்கவாத நோய் வருகிறது என்று கூறப்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக 85% இந்த நோய் வருவதாகவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.