வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்களும், அறிகுறிகளும் பற்றி தெரிந்து கொள்வோம்...

ஒவ்வொருவரும் முதலில் இந்த வைரஸ் காய்ச்சல் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வைரஸ் காய்ச்சல்கள் காற்று, தண்ணீர், கொசுக்கள் மூலமே பரவுகின்றன. பொதுவாக உடலுக்குள் சென்றவுடன் 3 முதல் 7 நாட்களுக்குள்,  வைரஸ் தன் தாக்கத்தைக் காட்ட ஆரம்பித்துவிடும்.

 
 
வைரஸ் காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலி, அரிப்புக்கள் மற்றும் தலைவலியை உணரக்கூடும். மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். 
 
வைரஸ் காய்ச்சல் வந்தால், அவற்றை உண்டாக்கும் வைரஸ் செல்களை தாக்கும். குறிப்பாக சுவாச மண்டலத்தை தான்  வைரஸ் காய்ச்சல் வெகுவாக பாதிக்கும். ஒருவேளை வைரஸ் மிகவும் சக்தி வாய்ந்ததெனில், அதனால் நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்பட்டு, அதனால் தீவிரமான பிரச்சனையையும் சந்திக்கக்கூடும். இதனை சரிசெய்ய, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் வைரஸ் காய்ச்சல்கள் பல வகையான பக்க விளைவுகளை  ஏற்படுத்தும்.
 
வைரஸ் காய்ச்சல் வந்தால், உடல் வறட்சியடையாமல் இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், ஓய்வு நன்கு எடுக்க வேண்டும் மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை தவறாமல் உட்கொண்டு வர வேண்டும்.
 
வைரஸ் காய்ச்சல் மற்றவருக்கு பரவாமல் இருப்பதற்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தான் உபயோகப்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்திருப்பதோடு, பகிர்ந்து கொள்ளக்கூடாது. கிருமிகள் பரவுவதை தடுக்க, அவ்வப்போது கழுவ வேண்டும். வீட்டில் பழ சாறுகள் மற்றும் இயற்கை பானங்கள் அவ்வப்போது கொத்தமல்லி டீ நீர், வெந்தய தண்ணீர் மற்றும் ஸ்டார்ச் அதிகம் நிறைந்த கஞ்சி குடித்து வருவது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை