சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை சரியான அளவில் வைக்காமல் இருந்தால் சில இணை நோய்கள் வரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருமா என்பதை தற்போது பார்ப்போம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களை விட சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருவதற்கு மூன்று மடங்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இதய நோய் வரும் என்று கூறப்படுகிறது.
இதய நோய் வராமல் தடுப்பதற்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் அதிக உடல் எடை இருந்தால் உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் மூன்று மாத சர்க்கரையின் சராசரி அளவை குறைவாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது
மேலும் மன அழுத்தத்தை குறைத்து தினமும் உடற்பயிற்சி செய்தால் இதய நோயிலிருந்து தப்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்