சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்றும் குறிப்பாக எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இனிப்பும் புளிப்பும் கலந்த இந்த சாத்துக்குடி ஜூஸில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதோடு கார்போஹைட்ரேட் நார்ச்சத்து கொழுப்பு பொட்டாசியம் வைட்டமின் சி ஆகியவையும் இருக்கிறது.
இதில் வெறும் 43 கலோரி அளவுகள் மட்டுமே இருப்பதால் எடையை குறைக்க உதவும். சாத்துக்குடி ஜூஸ் களைப்பை போக்கும் என்றும் ஆற்றல் தரும் பானமாகவும் சாத்துக்குடி ஜூஸ் கருதப்படுகிறது.
உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க வேண்டும். அல்சர் செரிமான பிரச்சனை உள்ளவர்களும் சாத்துக்குடி ஜூசை குடிக்கலாம்.