பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கடமை தவறிய இரு காவலர்களை பணி இடை நீக்கம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் பாபு உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மா நிலம் பில்பிட் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஷை, சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர்.
இதையடுத்து போலீஸார் ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை
இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இ ந் நிலையில், வழக்கை வாபஸ் பெற வேண்டுமென சிறுமியின் பெற்றோரை ராஜேஷின் கூட்டாளிகள் 5 பேர் மிரட்டி வந்த நிலையில் அவர்கள் மீது ஆசிட் வீசிவிட்டு ஓடிவிட்டனர்.
இதில் பலத்தை காயமடைந்த சிறுமியின் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுமியின் பெற்றோர் மீது ஆசிட் வீசிய 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கடமை தவறியதாக கஜ்ரெளலா மறும் தேஜ்பால் ஆகிய காவலர்களை சஸ்பெண்ட் செய்து காவல்துறை கண்காணிப்பாளார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.