Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 18 March 2025
webdunia

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

Advertiesment
கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

Mahendran

, திங்கள், 17 மார்ச் 2025 (18:41 IST)
புற்றுநோய், உயிருக்கு ஆபத்தான ஒரு நோயாகும். ஆனால் இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அதன் மீது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பல்வேறு வகையான புற்றுநோய்களின் காரணங்கள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. ஆனால், சில உணவுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
 
புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகள்
 
* கேனில் அடைக்கப்பட்ட பானங்கள்: கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் பிஸ்பெனால்-ஏ என்ற வேதிப் பொருள் உள்ளது. இது மார்பகப் புற்றுநோயை தூண்டக்கூடியதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
* குளிர்பானங்கள்: கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் அதிகளவில் சர்க்கரை உள்ளது. இது கணையப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.
 
* ஹைட்ரஜனேற்ற எண்ணெய்கள்: உணவுகளை நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனேற்ற எண்ணெய்கள், உடலில் பிரீ ரேடிக்கல்கள் உருவாக உதவுகின்றன. இது புற்றுநோயை தூண்டக்கூடும்.
 
* மைக்ரோவேவ் பாப்கார்ன்: மைக்ரோவேவ் பாப்கார்னில் பெர்ப்ளூரோக் டானாயிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
 
* சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை: இந்த வகை சர்க்கரை இன்சுலின் அளவை அதிகரிக்கும். இதனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான முக்கிய ஊட்ட்சத்துக்கள் எவை எவை?