Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரத்தக்குழாய் அடைப்பை ஏற்படுத்தும் உணவுகள்!

ரத்தக்குழாய் அடைப்பை ஏற்படுத்தும் உணவுகள்!
, வெள்ளி, 17 நவம்பர் 2023 (10:17 IST)
அன்றாடம் உண்ணும் உணவுகள் பலவற்றில் ஆரோக்கிய நன்மைகளும், கெடுதல்களும் சேர்ந்தே உள்ளன. சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அவை ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.


  • சீஸ் அதிகம் உள்ள பீட்சாவை அதிகம் சாப்பிடுவதால் ரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
  • ப்ரெஞ்சு ப்ரைஸ் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதுடன், இதயத்திற்கு தீங்கினை ஏற்படுத்தலாம்.
  • கூல்ட்ரிங்ஸை அதிகமாக குடிக்கும்போது உடலில் இன்சுலின் அளவை அதிகரிப்பதால் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • ஐஸ்க்ரீமில் அதிகமான கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளது. இதை அதிகமாக சாப்பிடுவது எடை அதிகரிப்பு, ரத்த நாள அடைப்புக்கு வழிவகுக்கும்.
  • எண்ணெய்யில் வறுக்கப்பட்ட சிக்கன் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவது ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும்.
  • கொழுப்பு அதிகம் நிறைந்த இறைச்சி வகைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ரத்த நாள அடைப்பை ஏற்படுத்தும்.
  • ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்கள், விளக்கங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயிறு செரிமான பிரச்சினையா? இதையெல்லா செய்யாதீங்க; ஒன்று மட்டும் செய்யுங்கள்!