Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினமும் கடற்கரைக்கு செல்வதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் கடற்கரைக்கு செல்வதால் கிடைக்கும் நன்மைகள்
, ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (21:47 IST)
தினமும் கடலுக்கு 15 நிமிடம் சென்று வந்தால் பலவிதமான நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 
நமது பூமியில் 70 சதவீதம் கடல் நீரே உள்ளது. பல வகையான நீர் ஆதாரங்களுக்கும் முக்கிய சான்று இந்த கடல் நீர்தான் விளங்குகிறது. இதில் சோடியம் குளோரைடு, கால்சைட், ஐயோடின், தாதுக்கள் போன்ற 84 வகை மூல பொருட்கள் இருக்கின்றன. 
 
இவை அனைத்தும் உடலின் நலத்தை சீராக வைக்கும். மேலும் உடலில் எந்தவித நோய் தொற்றுகளும் வராமல் பாதுகாக்கும். கடல் நீர் மிக அருமையான மருத்துவ குணம் கொண்டது. நீங்கள் கடல் நீரில் தினமும் குளித்தால் 20% சிவப்பு ரத்த செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 
 
இதனால் எளிதில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி உடலில் எந்தவித நோயையும் வராமல் தடுக்கலாம். அத்துடன் ரத்த சோகையை குணப்படுத்தி, சர்க்கரை அளவை சீராக வைக்கும்.
 
தினமும் கடற்கரைக்கு சென்று வந்தால் உங்கள் மன அழுத்தம் குறையும். தினமும் கடற்கரைக்கு சென்று, சுத்தமான காற்றை சுவாசிப்பதால் மூச்சு திணறல், சளி தொல்லை, ஆஸ்த்துமா, சுவாச பிரச்சினை உள்ளிட்டவைகள் நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதுளம் பழத்தில் உள்ள அற்புத மருத்துவப் பலன்கள்