Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை நோய் வருவதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்...!

Webdunia
சர்க்கரை நோய் வருவதற்கு முன்பாகவே சர்க்கரை நோயை தடுத்து நிறுத்த சில விஷயங்களை செய்தால், இந்த சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.
 
40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா  என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
முக்கியமாக அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், அதிக சோர்வு, அதிக  பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இவர்களெல்லாம் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என  உறுதிபடுத்திக் கொள்வது நல்லது. 
 
சர்க்கரை நோய் உள்ள சிலருக்கு முடி உதிர்தல், உடல் எடை குறைதல், கால் கை மரத்துப்போனதுபோன்ற உணர்வு, நரம்பு  பாதிப்பு, ரத்த நாளங்கள் பாதிப்படைதல், கண்களில் ரெட்டினா பகுதி பாதிப்படைதல், அடிபட்டால் விரைவில் ஆறாத புண்  போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
 
உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரித்து வர வேண்டியது அவசியமாகும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட  கூடாது. புரோட்டின் உணவுகளையும் தவிர்க்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்தல், உடற்பயிற்சி செய்தல், எடை தூக்குதல் போன்ற பயிற்சிகளை செய்யலாம். இதனால் உங்களது உடல் எடையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
 
புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்பவர்களுக்கு இருதய கோளாறுகள் மற்றும் பார்வை இழப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட், அதிக கெட்ட கொழுப்புள்ள உணவு வகைகள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் முதலியவற்றை முற்றிலும் தவிர்ப்பது  நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments