Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழங்களில் இயற்கையாகவே உள்ள சர்க்கரை அளவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...

பழங்களில் இயற்கையாகவே உள்ள சர்க்கரை அளவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...
, சனி, 12 ஆகஸ்ட் 2017 (21:07 IST)
பழங்களில் பல்வேறு பலன்கள் இருக்கிறது. இனிப்புச்சுவை மிகுந்த பழங்களை சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கல் ஏற்படும். எனவே, பழங்களில் எவ்வளவு சர்க்கரையளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.


 
 
மாம்பழம்: மாம்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை சத்து அடங்கியிருக்கிறது. ஒரு மாம்பழத்தில் 45 கிராம் சர்க்கரை கிடைக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் மாம்பழங்களை தவிர்ப்பது நல்லது.
 
திராட்சை: ஒரு கப் திராட்சை பழத்திலிருந்து 23 கிராம் சர்க்கரை கிடைக்கும். ஆனால். திராட்சை ஜீரண சக்தியை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதனை அளவாய் சாப்பிடலாம். 
 
அத்திபழம்: சற்றே பெரிய வடிவ இரண்டு அத்திப்பழத்தில் 16 கிராம் சர்க்கரை இருக்கிறது. குறைந்த அளவு சர்க்கரை இருக்கிறது என அதிகமாக எடுக்கக்கூடாது. 
 
வாழைப்பழம்: சிறிய அளவிலான வாழைப்பழத்தில் மட்டும் 14 கிராம் சர்க்கரை வரை இருக்கும். என்வே, சர்க்கரை நோயாளிகள் வாழைபழத்தை விட்டு விலகி இருப்பது நல்லது.
 
அவகோடா: இதில் அரைகிராம் அளவு தான் சர்க்கரை இருக்கிறது. சர்க்கரை குறைவாக இருந்தாலும் கலோரிகள் அதிகமாக இருக்கும். 
 
கொய்யாப்பழம்: சிறிய அளவிலான கொய்யாப்பழத்தில் 5 கிராம் சர்க்கரை இருக்கும். தோல் நீக்கி சாப்பிடுவதை விட தோலுடன் சாப்பிடுவது நல்லது. 
 
பப்பாளி: அரை பப்பாளிப் பழத்தில் 6 கிராம் சர்க்கரை இருக்கும். ஒரு நேரத்தில் முழு பப்பாளி பழத்தை சாப்பிடகூடாது.  
 
ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 5 கிராம் சர்க்கரை இருக்கிறது. 
 
செர்ரீ: ஒரு கப் செர்ரீ பழத்திலிருந்து 18 கிராம் சர்க்கரை கிடைக்கும். 
 
பேரிக்காய்: இவற்றில் 17 கிராம் சர்க்கரைச் சத்து அடங்கியிருக்கிறது. 
 
தர்பூசணி: நீர்சத்து நிறைந்த தர்பூசணியில் 17 கிராம் சர்க்கரை கிடைக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாராஷ்டிரா ஸ்டைல் மல்வானி இறால் குழம்பு!!