Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அகத்தியர் கூறும் நாடி இலக்கணம்!

Advertiesment
Agathiyar Nadi Grammar
, புதன், 4 ஜனவரி 2023 (22:03 IST)
சங்ககாலத்திற்கு முன் வாழ்ந்த அகத்தியர் மருத்துவம் பற்றிய தன் நூலில் நாடி இலக்கணம் பற்றி குறிப்பிட்டுள்ளார். 

காலமே சேத்ம நாடியும், கடும்பகல் அல்லது உச்சி  நேரத்தில் பித்த நாடியும், மாலையில் வாத நாடியும், வகைதப்பி அல்லது ஒழுங்கு மாறித்துடித்து நின்றால், அவர்களுக்கு வாழ்வு குறுகியது என்று கூறுகிறார்.

நாடி செம்பூத்து அல்லது கள்ளிக்காய் காக்காய் போல் துடித்து நடந்தால், ஒரு மாதத்தில் வியாதி தீராவிட்டால் 10 மாதத்தில் மரணம் உண்டாகும் என்று கூறுகிறார்.

அதேபோல் சேத்ம நாடியானது குதிரையைப் போல் திமிர்த்து நின்றால் அப்படிப்பட்டவர்கள் சிரமம் என்று  தன் செய்யுளில் கூறியுள்ளார்.

பித்த நாடியும், சீதள நாடியும் கொத்தித்து மேல் வாத நாடி மூடினால் அசாத்தியய ரோகம் உண்டாகும் ,கண்கள் குளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலும்புகளை வலுவாக்கும் தயிர்.. உடல் எடை சீரமைக்கவும் உதவும்!