Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்குபஞ்சர் அற்புதம்.....!

Advertiesment
அக்குபஞ்சர் அற்புதம்.....!
, திங்கள், 29 ஜனவரி 2018 (11:08 IST)
வளர்ந்துவரும் நாகரிக உலகில் நாம் அனைவரும் எதையோ ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றோம்! உடல் அசதியுரும் போதும், மனது சோர்ந்து  போகும்போது தான் நின்று நிதானமாய் நம் உடலுக்கும் மனதிற்கும் என்னவாயிற்று என்று சிந்திக்க துவங்குகிறோம். அப்படி சிந்தித்தப்பின் தான் நாம் நோயுற்று இருக்கிறோம் என்று அறிகிறோம். இந்த நோயை எப்படி களைவது என்று யோசித்து பல மருந்து மாத்திரைகளை எடுக்க ஆரம்பிக்கிறோம்.
இந்த மருந்து மாத்திரைகளினால் பல நோய்கள் காணமல் போகின்றன. பல நோய்களை நம்மால் சரி செய்ய முடிவதில்லை. சில மாத்திரை மருந்தினால் பல பக்க விளைவுகளையும் நாம் சந்திக்கவேண்டி இருக்கின்றது.
 
இந்த பக்கவிளைவுகளை களைவது எப்படி? இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று யோசிக்கவேண்டும். இந்த மருந்து மாத்திரை பக்கவிளைவுகள் இவை இல்லாமல் வாழ முடியாதா என்று ஏங்குபவரானால் உங்களுக்கு இதோ "அக்குபஞ்சர்" எனும் மாற்றுமுறை மருத்துவம்.
 
அக்குபஞ்சர் என்னும் மாற்றுமுறை மருத்துவத்தால் பலதரப்பட்ட நோய்களை சரி செய்ய முடியும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் செய்யப்படுவது. அக்குபஞ்சர் என்றால் நம் உடலில் இருக்ககூடிய புள்ளிகளை நுண்ணிய ஊசிகளைக் கொண்டு நம் நோய்களை சரிசெய்வது. இந்த புள்ளிகள் அனைத்தும் நம் உடலின் தோலின் அடுத்த அடுக்கிலேயே அமைந்திருக்கிறது. இதை சக்தி ஓட்டப்பாதை என்றும் அழைக்கலாம்.
 
அனைத்துவிதமான நோய்களுக்கும் தீர்வு இந்த அக்குபங்க்சர் அளிக்கிறது. நீடித்த நாட்பட்ட வியாதிகளுக்கும் இது தீர்வு அளிக்கின்றது. பக்கவிளைவுகள் இதில்  இல்லை, நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ஏற்ப அந்த காரணத்தை களைவதுதான் இந்த சிகிச்சையின் நோக்கம்!
 
     * மனம் சார்ந்த பிரச்சினையா
     *  உடல் சார்ந்த பிரச்சினையா
     * அழகு சார்ந்த பிரச்சினையா
     * எலும்பு , தசை சார்ந்த பிரச்சினையா
     * குழந்தையின்மை பிரச்சினையா
     * குடிப்பழக்க பிரச்சினையா
     * நரம்பு சார்ந்த பிரச்சினையா
     * தூக்கமின்மையா
     * வலி சார்ந்த பிரச்சினையா
 
தயக்கம் வேண்டாம் கலக்கம் வேண்டாம், உங்கள் அருகாமையில் உள்ள நன்கு அனுபவம் பெற்ற அக்குபஞ்சர் சிகிச்சையாளரை அணுகுங்கள் உங்கள் நோய்கள் மற்றும் பக்கவிளைவுகள் சார்ந்த கவலைகளை மறந்துவிடுங்கள்.
 
webdunia

த.நா.பரிமளச்செல்வி,
அக்குபஞ்சர் மருத்துவர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாவில் எச்சில் ஊறும் சுவையான தக்காளி ஊறுகாய் செய்ய...!