Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடையில் நம்மை தாக்கும் சரும நோய்கள் - கோடையே போ! போ!

Advertiesment
summer session special
கோடை என்பதும் இயற்கையின் கொடைகளில் ஒன்றுதான் என்றாலும் கோடையை நாம் வெறுக்கத்தான் செய்கிறோம்,  காரணம் கோடையின் தாக்கம் நம்மை அத்தனை பாடாய் படுத்துகிறது. இப்படிப்பட்ட கோடையின் கொடுமைகள் என்னதான் செய்யும் என்பதையும் அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளையும் நாம் பார்க்கலாம்.

 
கோடையில் பல நோய்கள் நம்மை தாக்கக்கூடும் அவற்றில் முதன்மையானது தோல் சரும நோய்கள் !
 
* வேர்க்குரு
* வறண்ட சருமம்
* வியர்வை
* முடி உதிர்தல்
* அம்மை
 
மேற்கூறிய நோய்களில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள்
 
* வெய்யிலில் அதிகம் சுற்றக்கூடாது
* தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்
* Sun Screen Lotion போட்டுக்கொள்ளலாம்
* குடையை பயன்படுத்தவேண்டும்
* கோடைக்கு தகுந்தாற்போல வெளிர்நிற ஆடைகள் உடுத்த வேண்டும்
* இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவேண்டும்
* Oil மசாஜ் செய்துக்கொள்ளவேண்டும்
* அதிக சோப்பு போட்டு குளிக்க கூடாது.
 
மேலும் உடல் சூட்டை ஏற்படுத்தக்கூடிய உணவு வகைகளை தவிர்த்து நீர்சத்து மிகுந்த உணவுகளை உண்ணவேண்டும்.
 
வேர்க்குரு என்பது பலரது கோடைகால நோயாக இருப்பதை நாம் அதிகமாக காண முடிகிறது, இதற்க்கு பருத்தி ஆடைகளை அணிவது நல்லது, மற்றும் வெய்யிலில் சுற்றாமல் இரண்டு வேலை குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும், வெந்நீர் குளியல்  கூடாது,
 
மேலும் சீரகத்தை தேங்காய்பால் இட்டு அரைத்து உடலில் பூசி 30 நிமிட நேரம் வரை ஊறவைத்து குளிர்ந்த நீரில் சோப்பு  போடாமல் குளித்து வந்தால் வேற்குருவை முற்றிலும் தவிர்க்கலாம், அழிக்கலாம்! வந்த பின்பு வருந்துவதை விட வரும்முன் காப்போம்!!
 
(மீண்டும் தொடர்வோம்)
 
-த.நா.பரிமளச்செல்வி,
அக்குபஞ்சர் மருத்துவர்



 
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடி உதிர்வை தடுத்து முடி அடர்த்தியாக வளர இயற்கையான வழி!