மஞ்சள் கலந்த பாலில் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு வழங்குகிறது. இது குறித்த அறிவியல் பூர்வமான பத்து நன்மைகள் இதோ...
- இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், நோய் மற்றும் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
- மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை கலந்த பால் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன, அவை வீக்கம் மற்றும் மூட்டு வலியைக் குறைக்கலாம்.
- மஞ்சள் கலந்த பால் நினைவாற்றலை பாதுகாக்கவும், அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோயிலிருந்து மூளையின் செயல்பாடு குறைவதைக் குறைக்கவும் உதவும்.
- மஞ்சளில் உள்ள குர்குமின், மனச்சோர்வின் அறிகுறிகளை குறைக்க உதவும்.
- மஞ்சள் கலந்த பால் இதய நோயிலிருந்து பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.
- மஞ்சள் கலந்த பால், இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம் மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம்.
- இலவங்கப்பட்டை, இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவை கலந்த பால் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- மஞ்சள் கலந்த பாலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உங்கள் உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.
- மஞ்சள் கலந்த பாலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தலாம்.
- மஞ்சள் கலந்த பால் அஜீரணத்தை போக்க உதவும். சளி தொல்லையில் இருந்தும் பாதுகாக்கும்.
- மஞ்சள் கலந்த பால் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்திருக்கும். இது எலும்பு நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.