பொதுவாகவே காய்கறிகளில் நிறைய சத்துக்கள் அடங்கியிருக்கிறது.. அந்த வகையில் கத்திரிக்காயில் என்னென்ன சத்துக்கள் அடங்கியிருக்கிறது? என்ன நோயை குணப்படுத்துகிறது என இன்று பார்ப்போம்..கத்திரிக்காய் கருப்பு, ஊதா, வெள்ளை என பல நிறங்களிலும் கடைகளில் கிடைக்கிறது.. அதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, புரதம், பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியிருக்கிறது.
கத்திரிக்காயில் வைட்டமின் அதிகமாக இருக்கும் காரணத்தால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினை போக்கும்..
பிஞ்சு கத்திரிக்காய் சாப்பிட்டால் வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய், சளி, கீழ்வாதம், பித்தம், மலச்சிக்கல், தொண்டைக்கட்டு, உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் போக்கும்..
கத்திரிக்காயில் வைட்டமின் பி அதிக அளவு உள்ளதால் நாம் உண்ணும் உணவு விரைவாகவே சத்தாக மாற அது உதவுகிறது...
உடலில் அரிப்பு ஏற்படும் என்பதற்காக முத்திய கத்திரிக்காயை முற்றிலுமாகவே தவிர்க்க முடியாது ஏனெனில் முத்திய கத்திரிக்காயில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் உடலின் வளர்ச்சிக்கு அது பயன்படும்.. கத்திரிக்காய் கண் பார்வை திறனை அதிகரிக்கும்..
அதேநேரம் உடலில் சொறி சிரங்கு புண் உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது.. அதேபோல் கத்தரிக்காய் வற்றல் சாப்பிட்டால் உடம்பு சூடாகும். மேலும், கத்திரிக்காய் சாப்பிட்டால் உடலில் அரிப்பு ஏற்படும் என பலரும் நினைக்கிறார்கள்.. உண்மையில் முத்திய பெரிய கத்திரிக்காய் சாப்பிட்டால் மட்டுமே அந்த பிரச்சினை வரும்.. பிஞ்சு கத்தரிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு நன்மையே தரும்.