Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பப்ளிக் டாய்லெட்டை பயன்படுத்த போகிறீர்களா? இதை முதலில் கவனியுங்கள்

, வெள்ளி, 17 மார்ச் 2017 (05:25 IST)
பெரும்பாலான வீடுகளில் டாய்லெட்டை சுத்தமாக வைத்திருக்கும் பழக்கம் உண்டு. தினசரி ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தமாக வைத்திருப்போம். ஆனால் இந்த சுத்தத்தை பப்ளிக் டாய்லெட்டுக்களில் எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் வெளியே செல்லும்போது இயற்கை உபாதைகளுக்கு பப்ளிக் டாய்லெட்டுக்களை பயன்படுத்தியே ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இத்தகைய காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்



 


1. பப்ளிக் டாய்லெட்டின் உள்ளே நுழைந்தவுடன் முதலில் நன்றாக தண்ணீர்விட்டு டாய்லெட் சீட்டை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல் உபயோகித்து முடித்த பின்னரும் அதைச் சுத்தம் செய்து விட்டுதான் வெளியே வர வேண்டும்

2. பப்ளிக் டாய்லெட்டில் இருக்கும் குழாய்கள், தாழ்ப்பாள்கள் ஆகியவற்றை நேரடியாக கையால் தொடாமல் கையில் டிஷ்யு பேப்பர் அல்லது சானிடைசர் வைத்திருக்க வேண்டும்

3. நாள்கணக்கில் ரயிலில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டால் நாம் வீட்டில் இருந்தே, கழிப்பறையில் பயன்படுத்த மக், கை உறைகள், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்.  கைகளில் பிளாஸ்டிக் உறைகள் அணிந்துகொள்ளவது நலம். கட்டாயம் காலணிகள் அணிந்துதான் கழிப்பிடத்துக்குச் செல்ல வேண்டும்.

4.  பப்ளிக் டாய்லெட்டை பயன்படுத்திய பின்னர், வீட்டுக்கு வந்ததும் உடனடியாக அந்தரங்க உறுப்புகளை, சோப், சானிடைசர் கொண்டு நன்றாக கழுவிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொப்பை என்றால் என்ன? தொப்பையை குறைப்பது எப்படி?