Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொப்பை என்றால் என்ன? தொப்பையை குறைப்பது எப்படி?

தொப்பை என்றால் என்ன? தொப்பையை குறைப்பது எப்படி?
, வெள்ளி, 17 மார்ச் 2017 (05:08 IST)
இன்று 40 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலானோர்களுக்கு இருக்கும் பிரச்சனை தொப்பை. இதனால் உருவ அழகு கெடுவதோடு, சுறுசுறுப்பாகவும் இயங்க முடியாது.இந்த தொப்பை என்றால் என்ன? இதை கரைப்பது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்



 


பொதுவாக, அனைவரது உடலிலும் டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides), தோல்புறக் கொழுப்பு (Subcutaneous fat), உட்புறக் கொழுப்பு (Visceral fat) என மூன்று வகையான கொழுப்பு சத்துக்கள் இருக்கும். இவற்றில் டிரைகிளிசரைட்ஸ் ரத்தத்தில் கலந்து இருக்கும். தோல்புறக் கொழுப்பு தோலின் அடியில் உள்ள கொழுப்புப் படலம். உட்புறக் கொழுப்பு என்பவை குடலின் வெளிப்புறம் ஒட்டிக்கொண்டிருப்பவை. இந்தக் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் அதிகமாக சேர்வதைத்தான் தொப்பை என்று கூறுகின்றோம்

தொப்பை உண்டாக முக்கிய காரணங்கள்:

.1. எண்ணெய் பலகாரங்கள், ஜங்க் ஃபுட்ஸ், கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள், அதிகளவு எடுத்து கொள்ளப்படும் கார்போனேட்டட் பானங்கள்

2. நார்ச்சத்து குறைந்த உணவு குறைபாடு

3. உடற்பயிற்சி, உடல் உழைப்பு இன்மை.

4. மனஅழுத்தம், சோகம், கோபம் காரணமாக அதிகமாகச் சாப்பிடுதல்.

5. மதுப்பழக்கம்.

6. தூக்கமின்மை.

7. பிரசவத்துக்குப் பிறகான ஹார்மோன் மாற்றம்.

தொப்பையை குறைக்க என்ன செய்ய வேண்டும்:

1. முட்டை, பாதாம், ஓட்ஸ், யோகர்ட், பால், புரொக்கோலி, பச்சைக்காய்கறிகள், மீன், இறைச்சி, கீரை வகைகள், முளைக்கட்டிய பயறு, கடலை, பீன்ஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதோடு எண்ணெயில் பொரித்த உணவுகளைத் அறவே தவிர்க்க வேண்டும்

3. தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும்

4. அடிவயிற்று பயிற்சிகள், யோகாசனங்கள், சிட் அப் ஆகிய பயிற்சிகளை ரெகுலராக செய்வதால் அடிவயிற்றில் உள்ள சதையைக் குறைக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக் குடிக்க காரணம் என்ன?